அனுபவ வீரர் இப்படியா செய்வது.. ஆண்டர்சன் மேஜிக்கால் ரகானே விக்கெட்..தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சி
லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் 2வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
Recommended Video
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2வது நாளான இன்று ஆட்டம் சூடுபிடித்துள்ளது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 276 ரன்களை எடுத்தது.

முதல் நாள் முடிவு
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ரோகித் சர்மா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 83 ரன்களை அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை குவித்தனர். பின்னர் வந்த புஜார மீண்டும் சொதப்ப, விராட் கோலி 42 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 276 ரன்களை சேர்த்தனர்.

2ம் நாள் ஆட்டம்
இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டம் இருந்த சூழலில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் அஜிங்கியா ரகானே நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே நம்பிக்கை தகர்ந்தது. இன்றைய போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்தை ஒல்லி ராபின்சன் வீச, கே.எல்.ராகுல் அதனை ட்ரைவ் ஷாட் அடிக்க முயன்றார். சிரமமாக முறையில் வந்த அந்த பந்தை நன்கு கைகளை நீட்டி ட்ரைவ் ஷாட் அடிக்க, கவர் திசையில் இருந்த சிப்ளே சுலபமாக பிடித்தார்.

தேவையில்லாத விக்கெட்
ராகுல் வெளியேறினாலும் துணை கேப்டன் அஜிங்கியா ரகானே களத்தில் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2வது ஓவரில் அதுவும் பொய்யானது. ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை ரகானே அடிக்க முயன்ற போது பேட்டில் எட்ஜாகி கேட்ச் ஆனது. இதனால் தொடக்கமே இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அதிருப்தி
ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட் சைட் ஆஃப் ஆக வைட் திசையில் பந்து வீசினார். அனுபவ வீரரான ரகானே முதலில் தடுப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும். அதன்படி வைட் திசையில் சென்ற அந்த பந்தை விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வேண்டுமென்றே அதனை அடிக்க முயன்று தேவையின்றி அவுட்டானதாக ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications