Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 2வது டெஸ்டிலிருந்து சிராஜ் நீக்கப்பட வாய்ப்பு.. புதிய யுத்தியை கையில் எடுக்கும் இந்தியா

விசாகப்பட்டினம் : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது.இந்த போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினம் நகரில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனினும் இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் ஜடேஜா விராட் கோலி போன்ற வீரர்கள் இல்லை.

India vs England 2nd test - Mohammed siraj might not play in vishakapattinam

இதன் காரணமாக இந்திய அணி பல மாற்றங்களை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பந்துவீச்சில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியது. இங்கிலாந்து அணியை 420 ரன்கள் அடிக்க விட்டது தான் முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு காரணமாக இருந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இங்கிலாந்து அணி ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டுமே பயன்படுத்தி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பந்து வீச பயன்படுத்தியது. இதுதான் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் இந்திய அணி வழக்கம்போல் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற யுத்தியை பயன்படுத்தினர்.

இதில் முதல் டெஸ்டில் சிராஜ் முதல் இன்னிங்க்ஸில் நான்கு ஓவர்களும் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு ஓவர்களுமே வீசினார்கள். இதில் எந்த விக்கெட்டுமே எடுக்கவில்லை. இதனால் சிராஜை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நான்காவதாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தலாமா என்ற யோசனையில் டிராவிட் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள்.மேலும் விசாகப்பட்டினத்தில் களிமண் கலந்த ஆடுகளம் தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

களிமண் ஆடுகளம் தோய்வாகவும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். இதன் காரணமாக பும்ராவை மட்டும் வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திக் கொண்டு நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை களம் இறக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஜடேஜா இல்லாத நிலையில் சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதோ மற்றும் சவுரப் குமார் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை பயன்படுத்த இந்தியா முடிவு எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த திட்டம் கை கொடுக்குமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, February 1, 2024, 12:16 [IST]
Other articles published on Feb 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+