IND vs ENG: இந்திய அணிக்கு அடுத்த அடி.. பும்ரா நீக்கம்.. பிரின்ஸ், ராகுல், அர்ஷ்தீப் சேர்ப்பு
லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் பெரும் பின்னடைவாக முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக நீக்கப்பட்டார். மேலும், ரோஹித் சர்மா இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், இஷான் கிஷன், அக்சர் படேல், பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்.
3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இந்த நிலையில் டாஸ் இழந்தது குறித்துப் பேசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், தாங்களும் முதலில் பந்துவீசவே திட்டமிட்டதாகத் தெரிவித்தார்.
இந்தப் போட்டிக்கான விளையாடும் அணியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழங்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. காயம் அடைந்த பும்ரா மற்றும் ஏற்கனவே காயம் காரணமாக விலகிய வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் விளையாடும் அணிக்குள் வந்துள்ளனர்.
மேலும், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த போட்டியைத் தவறவிட்ட அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் மீண்டும் விளையாடும் அணிக்குள் திரும்பியுள்ளார். இதனால் சிவம் துபே பிளேயிங் 11-இல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் பேட்டிங்கை வலுப்படுத்த தக்க வைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் சாகிப் மஹ்மூதிற்குப் பதிலாக ஜோஷ் டங் அணிக்கு திரும்பினார்.


Click it and Unblock the Notifications
