Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - இந்த 4 பேரின் வாழ்க்கை இனி வேற மாதிரி ஆக போகுது.. இந்தியாவின் எதிர்காலம் இவங்க தான்

IND VS ENG : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சீனியர்கள் இல்லாமல் இந்தியா வீழ்த்தி இருப்பது புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தத் தொடரில் சிறந்து விளங்கி நாளைய நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கும் வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருப்பது இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தான்.

India vs England - 4 cricketers might be super star in test cricket

22 வயதிலேயே தொடர்ந்து இரண்டு இரட்டை சதம் அடித்து ஜெய்ஸ்வால் அசத்தியிருக்கிறார். நான்கு டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ் விளையாடி 655 ரன்கள் குவித்து இருக்கிறார். இதன் மூலம் இனி இந்திய டெஸ்ட் அணியில் ஆஸ்தான தொடக்க வீரர் என்ற நிலை ஜெய்ஸ்வாலுக்கு வந்திருக்கிறது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சர்பராஸ் கான்.

ரஞ்சி கிரிக்கெட்டில் சதம், சதமாக அடித்து ஒரு கட்டத்தில் பிராட்மனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெருமையை சர்பராஸ்கான் பெற்றிருந்தார். ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு முதல்முறையாக அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. நான்காவது டெஸ்டில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப சர்பராஸ் கான் மூன்றாவது டெஸ்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்கள் என சர்பராஸ் அபாரமாக விளையாடி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இதனால் இனி சர்பராஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல்.

23 வயது ஆன அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டிற்கு பிறகு இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். நான்காவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 90 ரன்களை சேர்த்தார். இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் மூலம் துருவ் ஜூரல் இனி விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றாலும் ஒரு பேட்ஸ்மனாக விளையாட வேண்டும் என்ற அளவுக்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஆகாஷ் தீப். 27 வயதான இவர் தாம் விளையாடிய முதல் டெஸ்டில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஆகாஷ் தீப் பேட்டிங்கும் வரும் என்பதால் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆகாஷ் தீப்பை நாம் அடிக்கடி பார்க்கலாம்.

Story first published: Tuesday, February 27, 2024, 16:01 [IST]
Other articles published on Feb 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+