Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில் தேவ்-ன் 41 வருட சாதனை.. முறியடித்து வரலாறு படைத்த ஜஸ்பிரித் பும்ரா.. வேற லெவல் கம்பேக்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து வெற்றிக்கு வழிவகுத்தவர்களில் ஜஸ்பிரித் பும்ரா முக்கியமானவர்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் அடித்த இந்திய அணி, இங்கிலாந்தை விட 101 ரன்கள் பின் தங்கியது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் கம்பேக் கொடுத்து 466 ரன்களை குவித்தது. இதனால் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஓவல் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவே ஆகும். இதனால் கேப்டன் கோலியை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

பும்ராவின் சாதனை

பும்ராவின் சாதனை

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் புகழ் மழை பொழிந்து வருகிறது. அவர் நேற்றைய போட்டியின் போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

 கபில் தேவ் முதலிடம்

கபில் தேவ் முதலிடம்

முன்னாள் வீரர் கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இவரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 24 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

 விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இந்திய அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் ஏமாற்றினார். இதனால் பும்ரா மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

விமர்சனங்களுக்கு பதிலடி

விமர்சனங்களுக்கு பதிலடி

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கு பதிலடி கொடுத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்டினார். இதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்து உதவினார். 3வது டெஸ்டில் 2 விக்கெட்டுகளும், 4வது டெஸ்டில் 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதனால் இந்த தொடரில் இதுவரை 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

Story first published: Tuesday, September 7, 2021, 12:26 [IST]
Other articles published on Sep 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+