For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஒரே கல்லில் 2 மாங்காய்” ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட வருட சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பண்ட்-ன் அதிரடி

பண்ட்-ன் அதிரடி

முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 98 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது இந்திய அணியை ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி தான் அதிரடி பேட்டிங்கால் காப்பாற்றினர். ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் அடித்து அசத்தினர்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

இதன் மூலம் ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை உடைத்திருந்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த விக்கெட் கீப்பராக தோனி இருந்துவந்தார். 2005ம் ஆண்டு அவர் 93 பந்துகளில் சதமடித்தார். ஆனால் ரிஷப் பண்ட் தற்போது 89 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார்.

சச்சினை முந்திய பண்ட்

சச்சினை முந்திய பண்ட்

இந்நிலையில் இத்துடன் சேர்த்து சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் பண்ட் முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகக்குறைந்த

வயதில் 100 சிக்ஸர்களை அடித்தவர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 25 வயதில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆனால் ரிஷப் பண்ட் 24 வயதிலேயே படைத்துவிட்டார். இப்பட்டியலில் சுரேஷ் ரெய்னா 25 வயது, 7 நாட்களில் 100 சிக்ஸர் அடித்து 3வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணி எழுச்சி

இந்திய அணி எழுச்சி

ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி சதத்தால் 98 - 5 என இருந்த அணியின் ஸ்கோர், 416 - 10 என பெரும் உட்சத்தை தொட்டது. கடைசி நேரத்தில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 16 பந்துகளில் 31 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 2, 2022, 22:56 [IST]
Other articles published on Jul 2, 2022
English summary
Rishabh pant record in India vs england 5th test ( இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் மற்றும் தோனியின் சாதனைகளை ரிஷப் பண்ட் தகர்த்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+