Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashwin 100th test - அஸ்வின் டாப் 5 சிறந்த பந்துவீச்சு.. தனி ஆளாக ஆட்டத்தையே மாற்றிய செயல்பாடு

R Ashwin : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று தன்னுடைய நூறாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார். இதன் மூலம் இந்த பெருமையை பெறும் 14 வது இந்திய வீரர், முதல் தமிழக வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு சொந்தமாகி இருக்கிறது.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளின் விளையாடிய அஸ்வின் 57 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 35 முறை 5 கேட்டுக்களையும் எட்டு முறை பத்து விக்கெட் களையும் அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 5 சதம் அடித்திருக்கிறார்.

Ashwin best performances

இந்திய அணியைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100, 200,300, 400,500 ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் டாப் 5 செயல்பாடுகளை தற்போது பார்க்கலாம். வெளிநாட்டில் அஸ்வினுக்கு பந்து வீசத் தெரியாது என்பது போல் அவர் மீது ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டிருந்தது. அதனை 2018 ஆம் ஆண்டு பிரம்மங்கம் டெஸ்ட் போட்டியில் சுக்கு நூறாக உடைத்தார்.

அந்தப் போட்டியில் அலெஸ்டர் குக், பென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம் இந்தியாவுக்கு 194 ரன்கள் தான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 162 ரன்களில் தோல்வியை தழுவியது. இதுபோன்று 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இரண்டு இன்னிங்ஸ்களும் தலா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஒட்டுமொத்தமாக அந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாகவே 14 விக்கெட்டுகளை தான் கைப்பற்றிய நிலையில் சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் சிறப்பான கம் பேக்கை கொடுத்திருந்தார். இதைப் போன்று 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் அஸ்வின் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 49 ஓவர் வீசிய அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 12.4 ஓவர்கள் வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2015 நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதுபோன்று 2023 ஆம் ஆண்டு டோமினிக்காவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் ஐந்து விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அஸ்வின் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

Story first published: Thursday, March 7, 2024, 8:32 [IST]
Other articles published on Mar 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+