Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிஆர்எஸ் விதியில் மாற்றம் வேண்டும்.. பென் ஸ்டோக்ஸ் கோரிக்கையை நிறைவேற்றினால், அவருடைய கேரியரே காலி!

IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. கடைசி இன்னிங்ஸில் அவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 122 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸ் பேட்டிங் செய்த போது டி ஆர் எஸ் விதி அவர்களுக்கு எதிராக திரும்பியது. இதனால் இந்த drs விதியில் மாற்றம் செய்ய வேண்டும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

India vs England - Ben stokes urges to remove umpire call from DRS will affect his carrier

அதாவது பந்து ஸ்டெம்பில் அடிப்பது போல் டி ஆர் எஸ் கிராபிக்ஸில் கணிக்கப்பட்டால், அதற்கு அவுட் தான் வழங்க வேண்டும். இல்லை பந்து லேசாக தான் ஸ்டம்பில் பட்டு இருக்கிறது என்று கணிக்கப்பட்டால் அதற்கு அவுட் வழங்கக்கூடாது. ஆனால் இந்த சூழலில் கள நடுவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை தான் இறுதி முடிவாக தருகிறார்கள்.

கள நடுவர் சொல்வது தான் இறுதி முடிவு என்றால் அப்போது எதற்கு இந்த டிஆர்எஸ் முறை. நான் இதை குறை சொல்லவில்லை. இதைப்பற்றி நான் அதிகம் பேசினால் இதனால் தான் நாங்கள் டெஸ்ட் போட்டியில் தோற்றோம் என்பது போல் ஆகிவிடும் என ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் டி ஆர் எஸ் கணிப்பில் பந்து டெம்பில் லேசாகப்பட்டு கள நடுவர் என்ன முடிவு தருகிறாரோ அதுதான் இறுதி முடிவு என்ற விதியை நீக்கிவிட்டால் ஸ்டோக்ஸ் இன் கெரியரே காலியாகி இருக்கும் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதன்படி நடுவரின் இறுதி முடிவால் எந்த பேட்ஸ்மேன் அதிக அளவு காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்று ஒரு புள்ளி விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் பென் ஸ்டோக்ஸ் நடுவரின் இறுதி முடிவால் 85 சதவீதம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அதாவது பந்து ஸ்டெம்பில் மட்டும் பட்டு, நடுவர் நாட் அவுட் என்று கூறி இருந்ததால் அவர் இத்தனை முறை காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

இதுபோன்று இங்கிலாந்தின் அதிரடி வீரர் பட்லர் 17 சதவீதம் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி 20 சதவீதம் மட்டும்தான் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு இந்த விதியால் 80 சதவீதம் அவுட்டே வழங்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டுபிளசிஸ் 60 சதவீதம் இந்த விதியால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலியா வீரர் கவாஜா 50 சதவீதம் இந்த விதியால் காப்பாற்றப்பட்டும் இருக்கிறார், 50% அவுட்டும் ஆகியிருக்கிறார். நியூசிலாந்து வீரர் டாம் பிளெண்டல் 75% இந்த விதியால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 50 சதவீதமும், ஆஸ்திரேலிய வீரர் சான் மார்ஷ் 50 சதவீதமும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் அசிம் அமலா 75% இந்த விதியால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை வீரர் மேத்யூஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ஆகியோர் 50 சதவீதம் இந்த விதியால் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, February 20, 2024, 8:32 [IST]
Other articles published on Feb 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+