For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களை யாரு பா வர சொன்னது.. திரும்ப போங்க! ரோகித் சர்மா செய்த தில்லாலங்கடி.. குழம்பிய இங்கிலாந்து

ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே ரன்கள் வித்தியாச அடிப்படையில் இந்தியா பெறும் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இந்த நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியின் போது ரோகித் சர்மா செய்த ஒரு காரியம் தற்போது ரசிகர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு சறுக்கல்களையும் மிகப்பெரிய வெற்றிகளையும் என இரண்டையும் கொடுத்திருக்கிறது.

Rohit sharma declare

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் போது எந்த இலக்கை கொடுத்தாலும் அதனை எதிரணி துரத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார்கள். அப்போது 97வது ஓவர் முடிவில் மைதானத்திற்கு தண்ணீர் பாட்டில்கள் இரு அணிகளுக்கும் கொண்டுவரப்பட்டது.

அப்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் ரோகித் சர்மா அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகி வந்து கொண்டிருந்தார். இதை பார்த்ததும் ரோகித் டிக்ளர் தான் செய்துவிட்டார் என நினைத்து களத்தில் இருந்த இரு அணி வீரர்களும் பெவிலியன் நோக்கி வந்தார்கள். இதை பார்த்ததும் ரோகித் சர்மா டென்ஷன் ஆகிவிட்டார். நான் எப்போது டிக்ளர் செய்தேன்? நீங்கள் ஏன் பெவிலியனுக்கு வருகிறீர்கள் இன்னும் சென்று கொஞ்ச நேரம் விளையாடுங்கள் என பெவிலியன் நோக்கி வந்தவர்களை ரோகித் சர்மா விரட்டி அடித்து விட்டார்.

இதனால் இந்தியா டிக்ளர் செய்ததா இல்லையா என்று குழப்பம் ஆடுகளத்தில் ஏற்பட்டது. அப்போது பென் ஸ்டோக்ஸ் இந்தியா டிக்ளர் செய்துவிட்டது. ஏன் மீண்டும் பேட்டிங் அனுப்புகிறார்கள் என்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசியாக கேப்டன் டிக்ளர் செய்யவில்லை எனத் தெரிந்தவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

ஆனால் அதில் ரேஹான் அஹமத் வீசிய ஓவரில் சர்பிராஸ்கான் 6, 4, 6, 0,1 ஆகிய ரன்களை அடித்திருந்தால் அப்போது இந்தியா 556 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இதனை அடுத்து ரோகித் சர்மா டிக்ளர் செய்தார். பெவிலியன் வந்த வீரர்களை திரும்பி விளையாடுங்கள் என்று கூறிவிட்டு பிறகு அடுத்த ஓவரில் ரோகித் சர்மா டிக்ளர் செய்தது இங்கிலாந்து அணியினரை குழப்புவதற்காக செய்த யுக்தியாக தான் பார்க்கப்பட்டது.

Story first published: Monday, February 19, 2024, 10:05 [IST]
Other articles published on Feb 19, 2024
English summary
India vs England - Confusion over Rohit sharma declaration in rajkot test உங்களை யாருப்பா வர சொன்னது.. திரும்ப போங்க! ரோகித் சர்மா செய்த தில்லாலங்கடி.. குழும்பிய இங்கிலாந்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+