Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ இதுதான் காரணமா...?? பும்ராவிடம் கூறிய ஸ்பெஷல் கேப்டன்சி அட்வைஸ்.. டிராவிட் வெளிப்படை பேச்சு!

எட்ஜ்பாஸ்டன்: ஜஸ்பிரித் பும்ராவுக்கு முக்கியமான கேப்டன்சி அட்வைஸ் கூறியது குறித்து ராகுல் டிராவிட் பகிர்ந்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி

இந்திய அணி

இதில் இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த தடுமாறிய போது ரிஷப் பண்ட் (146), ரவீந்திர ஜடேஜா (104) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் காப்பாற்றினர். எனினும் இவர்களின் ஆட்டத்தை விட, ஜஸ்பிரித் பும்ராவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

பும்ராவின் சாதனை

பும்ராவின் சாதனை

இந்திய அணி 375 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்த போது 400 ரன்களையாவது எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஒரே ஓவரில் பும்ரா அதனை மாற்றி அமைத்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி 35 ரன்களை குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை பும்ரா படைத்தார்.

பவுலிங்கும் அசத்தல்

பவுலிங்கும் அசத்தல்

பேட்டிங்கில் மட்டும் தான் ஒரு கேப்டனாக பும்ரா பொறுப்புடன் ஆடுவார் என நினைத்தால், பந்துவீச்சிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை பும்ரா கொடுத்தார். இன்னிங்ஸின் 2வது ஓவரிலேயே பும்ரா வீசிய பந்தில் இங்கிலாந்து ஓப்பனர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்களுக்கு நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லேவையும் 9 ரன்களுக்கு வெளியேற்றி பும்ரா அசத்தினார்.

டிராவிட்டின் அட்வைஸ்

டிராவிட்டின் அட்வைஸ்

இந்நிலையில் பும்ராவின் ஆட்டத்திற்கு டிராவிட் கொடுத்த அட்வைஸ் தான் புத்துணர்ச்சி கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய டிராவிட், கடந்த சில நாட்களாக பும்ராவிடம் நான் தொடர்ந்து பேசி வந்தேன். அப்போது அவரிடம் எந்தவித பதற்றமும் வேண்டாம், நிதானமாக இருங்கள். ஒரு கேப்டனாக இருப்பதை விட, ஒரு பவுலராக அணிக்கு நீ தேவை என பும்ராவிடம் கூறியதாக டிராவிட் பகிர்ந்துள்ளார்.

சிறந்த லீடர்

சிறந்த லீடர்

தொடர்ந்து பேசிய அவர், பும்ரா மிகவும் துணிச்சலாக சுய முடிவை எடுக்கக்கூடியவர். ஆட்டத்தை பற்றி நன்கு புரிந்துக்கொண்டு அணி வீரர்கள் தனது அறிவுரைகளை கேட்டு நடக்கும்படி செய்துள்ளார். ஒரு கேப்டனாக மிக முக்கியமான ஒன்றாகும்.

Story first published: Saturday, July 2, 2022, 19:25 [IST]
Other articles published on Jul 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+