Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம புஜாராவா இது?.. தாறுமாறு ஸ்ட்ரைக் ரேட்.. 3வது டெஸ்டில் திடீர் திருப்பம்!

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சட்டீஸ்வர் புஜாராவின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தடுமாறியை இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் சீறு கொண்டு எழுந்துள்ளது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

ஆனால் ஆட்டத்தின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி 120 ரன்களை சேர்த்தது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறிய பிட்ச்-ல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அட்டகாசமாக ஆடினார்கள். இதனால் அந்த அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோரி பேர்ன்ஸ், ஹசீப் ஆகியோர் அரைசதம் கடந்தனர். கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை சேர்த்தது. இது இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை ஆகும்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இதனையடுத்து இன்று இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் மிக மோசமாக சொதப்பியதால், மீண்டும் அதையே செய்வார்கள் என ரசிகர்களிடயே பதற்றம் நிலவி வந்தது. அதற்கேற்றார் போல கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணிக்கு நம்பிக்கையாக இருந்த பார்ட்னர்ஷிப்பே உடைந்தது. சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 59 ரன்களுக்கு வெளியேறினார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இதன் பிறகு புஜாரா, கோலி, ரகானே ஆகியோர் இருந்ததால் இந்திய அணி இன்றே ஆட்டமிழந்து தோல்வியடையும் என எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியம் கொடுத்தார் சட்டீஸ்வர் புஜாரா. நீண்ட நாட்களாக நிறைய பந்துகளை மட்டுமே தின்றுவந்த அவர் பெரியளவில் ரன்களை எதுவும் எடுத்ததில்லை. அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 30 க்கு கீழ் சென்றிருந்தது.

ஃபார்முக்கு திரும்பிய புஜாரா

ஃபார்முக்கு திரும்பிய புஜாரா

இந்நிலையில் இன்று சீரான வேகத்தில் ரன்களை எடுத்தார். அதுவும் குறிப்பிட்ட பந்துகளுக்கு இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தார். முதலில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த புஜாரா, பின்னர் விராட் கோலியுடன் சேர்ந்து அரைசதம் விளாசினார். தற்போது வரை அவர் 70 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்று சீரான வேகத்தில் ரன்களை எடுத்தார். அதுவும் குறிப்பிட்ட பந்துகளுக்கு இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தார். முதலில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த புஜாரா, பின்னர் விராட் கோலியுடன் சேர்ந்து அரைசதம் விளாசினார். தற்போது வரை அவர் 70 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

வைரல்

வைரல்

புஜாராவின் ஆட்டத்தால் வியந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சட்டீஸ்வர் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட், 100க்கு மேல் இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதுகுறித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Story first published: Friday, August 27, 2021, 22:24 [IST]
Other articles published on Aug 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+