விசாகப்பட்டினம்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் நிலவரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஹர்பஜன்சிங் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
இந்திய அணியில் கே எல் ராகுல் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விலகி இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு பதில் சர்பிராஸ்கான், சவுரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங், இந்தியாவின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள, ஹர்பஜன் சிங் தொடக்க வீரராக ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடுவார்கள். மூன்றாவது வீரராக கில்லுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
கில் திறமையான வீரர் என்பதால் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இதே போல் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும். சீனியர் வீரர்களுக்கு பொறுப்பை அதிகமாக வழங்கும் போது அவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். என்னை கேட்டால் நாளை ஆட்டத்தில் சர்ஃபாஸ்கானுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
சர்பிராஸ் தான் நம்பர் ஐந்தாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் கடந்த சில காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் அதிக ரன்களை குவித்திருக்கிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை அணியில் ஹர்பஜன்சிங் தேர்வு செய்து இருக்கிறார்.
இதைக் கொண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக கே எஸ் பரத் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், நம்பர் 11-வது வீரராக குல்தீப் தான் இடம்பெற வேண்டும் என கூறியுள்ளார். குல்தீப் சுழற்சி இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் கடும் சவால்களை கொடுக்கும்.
இந்திய அணி கூடுதலாக சுழற் பந்துவீச்சாளர் வைத்து விளையாட வேண்டும் என்று நினைத்தால் அது குல்தீப் யாதவாக தான் இருக்க வேண்டும். ஆடுகளத்தில் பந்து திரும்பும் போது நாம் நான்கு ஸ்பின்னர் வைத்து விளையாடுவதில் தவறில்லை. ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்குனு ஏதேனும் இருந்தால் நீங்கள் சிராஜை வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் குல்தீப் தான் சரியான தேர்வு என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.