Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. ரோகித் அடித்த அந்த ஒரு ஷாட்... இந்தியாவுக்கு பிறந்த புதிய நம்பிக்கை!

ஹெட்டிங்லி: ரோகித் சர்மா அடித்த ஒற்றை ஷாட் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தடுமாறியை இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் சீறு கொண்டு எழுந்துள்ளது.

ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரான புஜாரா, விராட் கோலி, ரகானே என முக்கிய வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் இருந்ததால், ரோகித் - ராகுல் மீதுதான் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களும் சொதப்பியதால் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், அதிகபட்ச ரன்னே ரோகித் அடித்த 19 ரன்கள் தான்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இதனையடுத்து இன்று இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் மிக மோசமாக சொதப்பியதால், மீண்டும் அதையே செய்வார்கள் என ரசிகர்களிடயே பதற்றம் நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி வந்தனர். 60 பந்துகளுக்கு வெறும் 16 ரன்கள் மட்டுமே வந்திருந்தது.

ஒரே ஒரு ஷாட்டில் நம்பிக்கை

ஒரே ஒரு ஷாட்டில் நம்பிக்கை

இந்நிலையில் ரோகித் சர்மா அடித்த ஒற்றை ஷாட் அனைத்து வீரர்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. நீண்ட நேரமாக இங்கிலாந்து பவுலர்கள் பவுன்சர் பந்துகளை வீசி பயமுறுத்தி வந்தனர். அந்தவகையில் ஆட்டத்தின் 16வது ஓவரில் ரோகித் சர்மாவுக்கு எதிராக ஒல்லி ராபின்சன் ஷார்ட் பால் ஒன்றை போட்டார். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் திசையில் வந்த அந்த பந்தை ஸ்லிப் தலைக்கு மேலாக சாதூர்யமாக தட்டிக்கொடுத்தார். இதனால் அந்த பந்து சிக்ஸருக்கு சென்றது.

வீரர்களுக்கு நம்பிக்கை

வீரர்களுக்கு நம்பிக்கை

ரோகித் சர்மா அடித்த அந்த ஷாட்டில் எந்தவித பெரும் சிரமங்களும் அவர் படவில்லை. பந்தின் வேகத்தை உணர்ந்து மெதுவாக தட்டிக்கொடுத்தார். இதனால் லீட்ஸ் பிட்ச் ஒன்றும் அவ்வளவு பெரிய கடினம் இல்லை, அடுத்து வருபவர்களும், பிட்ச்-ன் தன்மையை உணர்ந்துக்கொண்டால், அசால்டாக விளையாடலாம் என கூறுவது போல அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார்.

புகழாரம்

புகழாரம்

ரோகித் சர்மா இந்த சிக்ஸரை அடித்த போது கமெண்டேட்டரி செய்து கொண்டிருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஒரு நாள் போட்டியின் ரோகித் சர்மா திரும்ப வந்துவிட்டார். நமக்கெல்லாம் தெரிந்த அதிரடி ரோகித் சர்மா இதுதான் என புகழ்ந்து தள்ளினார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் தற்போது வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா அரைசதம் கடந்துள்ளார்.

Story first published: Friday, August 27, 2021, 20:31 [IST]
Other articles published on Aug 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+