For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 அணிகள்.. 12 ஆண்டுகள்..தகர்க்க முடியாத இந்திய கோட்டை..தொடர்ந்து இந்தியா வென்ற டெஸ்ட் தொடர் பட்டியல்

: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை இழக்காத அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.

இந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் எல்லாம் தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இந்தியாவின் கோட்டையை மட்டும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.

India vs England - indian national cricket team won the 17 consecutive test series at home

இதுவரை 8 அணிகள் இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை வெல்ல முயற்சி செய்தது. ஆனால் யாராலும் அதை சாதிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அணி பெற்ற வெற்றியை தற்போது பார்க்கலாம். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரை 2013 ஆம் ஆண்டு இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 2015 ஆம் ஆண்டு மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியை மூன்றுக்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி 2017 ஆம் ஆண்டு வங்கதேசத்தை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தது. அதே ஆண்டு ஆஸ்திரேலிய அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. மீண்டும் இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்றது.

2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. 2018 ஆம் ஆண்டு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணி 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தது.மீண்டும் 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்தை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து அணியை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்தது. அதன் பிறகு நியூசிலாந்து அணி 2021 ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்றது. 2022 ஆம் ஆண்டு இலங்கையை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. தற்போது 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா தோற்கடித்து இருக்கிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

Story first published: Tuesday, February 27, 2024, 7:01 [IST]
Other articles published on Feb 27, 2024
English summary
India vs England - indian national cricket team won the 17 consecutive test series at home 8 அணிகள்.. 12 ஆண்டுகள்..தகர்க்க முடியாத இந்திய கோட்டை..தொடர்ந்து இந்தியா வென்ற டெஸ்ட் தொடர் பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+