Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘பந்தை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்’.. கோலியிடம் கெத்து காட்டிய பும்ரா.. 4வது டெஸ்டில் சுவாரஸ்யம்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா செய்த பெரும் விஷயம் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கோலி புகழ்ந்துள்ளார்.

இரு அணிகளும் மோதிய 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் தோல்வி பாதையை நோக்கிச் சென்ற இந்திய அணி 2வது இன்னிங்ஸில் மிகப்பெரும் எழுச்சியைப் பெற்றது.

அபார வெற்றி

அபார வெற்றி

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சு மிகவும் உறுதுணையாக இருந்தது. கடைசி நாளன்று பிட்ச்சானது வேகப்பந்துவீச்சுக்கு உதவாது என்றும் சுழற்பந்துவீச்சுக்கு தான் சாதகமாக இருக்கும். எனவே ஜடேஜாவுடன், அஸ்வினையும் கொண்டு வந்திருக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்தின் 10 விக்கெட்களில் 7 விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்ததுதான். இதற்கு காரணம் பிட்ச்-ல் ரிவெர்ஸ் ஸ்விங் ஒத்துழைத்தது தான்.

இந்திய பவுலர்கள்

இந்திய பவுலர்கள்

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அள்ளினர். உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும் , ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குறிப்பாக பும்ரா இரு இன்னிங்ஸிலுமே முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அணியை காப்பாற்றினார். அதாவது, முதல் இன்னிங்ஸின் போது அச்சுறுத்தல் கொடுத்து வந்த தொடக்க வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் அவர் தான் எடுத்தார். அதே போல முதல் இன்னிங்ஸில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒல்லி போப் - பேர்ஸ்டோ ஆகியோரையும் சொற்ப ரன்களுக்கு வெளியேற்றினார்.

கோலி பாராட்டு

கோலி பாராட்டு

இந்நிலையில் பும்ராவின் ஆட்டம் குறித்து கோலி ஸ்பெஷல் பாராட்டு தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த கோலி, கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் திறம்பட செயல்பட்டனர். ரிவெர்ஸ் ஸிவிங் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றினர். கடைசி நாளில் ரிவெர்ஸ் ஸ்விங் மூலம் 10 விக்கெட்டுகளையும் எடுத்துவிடலாம் என நினைத்தோம், நம்பினோம். அது பலன் கொடுத்துள்ளது.

பும்ராவின் செயல்

பும்ராவின் செயல்

பந்து ரிவெர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கிய உடனேயே ஜஸ்பிரித் பும்ரா நேராக என்னிடம் வந்தார். பந்தை என்னிடம் கொடுங்கள் நான் விக்கெட் எடுக்கிறேன் என கேட்டு வாங்கிச் சென்றார். சொல்லியபடியே அவர் சிறப்பாக வீசி 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தம் 22 ஓவர்களை வீசிய பும்ரா வெறும் 27 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஓவல் போன்ற களத்தில் இது சாதாரணமான விஷயம் இல்லை. மிகப்பெரும் பணி இது என பாராட்டியுள்ளார்.

பும்ரா சாதனை

பும்ரா சாதனை

ஜஸ்பிரித் பும்ரா நேற்று மிகப்பெரும் சாதனை ஒன்றையும் படைத்தார். அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னாள் வீரர் கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இவரின் சாதனையை தற்போது 24 போட்டிகளில் விளையாடி பும்ரா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 7, 2021, 17:29 [IST]
Other articles published on Sep 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+