For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்றில் முதல் முறை... ஜடேஜா படைத்த விநோத சாதனை.. இப்படியெல்லாமா இருக்கு?

ஹெட்டிங்லி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விநோதமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹெட்டிங்லி நகரத்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக இந்திய அணி ஓப்பனர் ரோஹித் சர்மா 19 ரன்கள் அடித்தார். ரகானே 18 ரன்களை அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சிக் கொடுத்தனர்.

தொடக்கம்

தொடக்கம்

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சீரான வேகத்தில் ரன்களை அவர்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 100 ரன்களை எளிதாக கடந்தது. பின்னர் இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் ரோரி பேர்ன்ஸ் 61 ரன்களுக்கும், ஹசீப் 68 ரன்களுக்கும் வெளியேறினர். இந்த ஜோடியை முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா பிரித்தனர்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

இந்நிலையில் இந்த விக்கெட்டின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விநோத சாதனை ஒன்றை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இங்கிலாந்து மைதானங்கள் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடியவை. இங்கு ஸ்பின்னர்களின் பாட்ஷா பழிக்காது. எனவே கடந்த 2 போட்டிகளிலும் சுழற்பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா மட்டுமே அணியில் இருந்தார். ஆனால் அவர் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் தான் அனைத்து விக்கெட்டையும் எடுத்தனர்.

விநோத சாதனை

விநோத சாதனை

இந்த சூழலில் 61 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றிய பின்பு நீண்ட நேரம் கழித்து ஒரு சுழற்பந்துவீச்சாளர் விக்கெட் எடுப்பது இதுவே முதல்முறையாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு விக்கெட்டிற்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தது நடைபெற்றதே இல்லை. இதற்குமுன் 1990-களில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் 25 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்த பிறகு 26வது விக்கெட்டை சுழற்பந்துவீச்சாளர் எடுத்திருந்ததே பெரிதாக பார்க்கப்பட்டது.

Story first published: Thursday, August 26, 2021, 20:36 [IST]
Other articles published on Aug 26, 2021
English summary
Ravindra Jadeja acheive a new record on test cricket history in 3rd test against england
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+