Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் சாதனை.. பேஸ்பாலாவது?மண்ணாவது? ஆள விடுங்கடா! பக்கா! டெஸ்ட் இன்னிங்ஸ்

Joe root : இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தன்னுடைய 31 வது சதத்தை அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் ஜோ ரூட் மோசமாக விளையாடியதாக பலரும் குற்றசாட்டினர்.

இதற்கு காரணம் ஜோ ரூட் தன்னுடைய இயல்பான டெஸ்டி இன்னிங்சை விளையாடாமல் பேஸ் பால் திட்டத்திற்கு மாறி அதிரடியாக விளையாட முயன்றதே அவருடைய சொதப்பலுக்கு காரணம் என்ற விமர்சனமும் வந்தது.

India vs England - Joe root hits classic test ton and first batsman in the world to score 10 ton vs india

இதனால் ரூட், இந்த பேஸ் பால் திட்டத்தை கைவிட்டு தமக்கு எது வருமோ அதை நோக்கி சென்று விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தினர். இந்த நிலையில் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தன்னுடைய பேஸ் பால் திட்டத்திலிருந்து பின்வாங்கி விட்டது. அதிரடியாக விளையாடிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இனியும் பேஸ் பால் திட்டத்தை கையில் எடுத்தால் உதை நிச்சயம் என்பதை உணர்ந்து மெதுவாக விளையாடத் தொடங்கினார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அபாரமாக விளையாடி வந்த ஜானி பாரிஸ்டோ தொடர்ந்து அதிரடியை கடைப்பிடித்ததால் 38 ரன்களிக் ஆட்டம் இழந்தார். இதனைப் பார்த்து ரூட் உங்களுடைய சகவாசமே வேண்டாம்! நான் என்னுடைய ஸ்டைலில் விளையாடுகிறேன் என்று டெஸ்ட் இன்னிங்சை ஆடினார். இதனால் ஜோ ரூட்டில் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர்.

ஜோ ரூட் தன்னுடைய இன்னிங்ஸை அபாரமாக கட்டமைத்தார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் பவுலிங்கை சமாளித்து அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து பக்காவான டெஸ்ட் இன்னிங்சை ஜோ ரூட் ஆடினார். 108 பந்துகளில் முதல் அரை சதத்தை கடந்த ஜோ ரூட் 219 பந்துகளை எதிர்கொண்டு தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட்டின் இந்த இன்னிங்ஸில் எந்த ஒரு அதிரடி ஷாட்டுமே கிடையாது.

அனைத்துமே கிரிக்கெட் புத்தக விதியின்படி இருப்பது போல் உள்ள ஷாட்டுகளை தான் ஜோ ரூட் இன்று விளையாடினார். இன்று இன்னிங்ஸில் ஜோ ரூட் மொத்தமே 9 பவுண்டரிகள் தான் அடித்திருந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தால் 112 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணி தற்போது 300 ரன்கள் நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. ஜோ ரூட்டின் இந்த சதம் ஒரு மிகப்பெரிய சாதனையும் அவருக்கு கொண்டு சேர்த்து இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக பத்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்று இருக்கிறார்.

Story first published: Friday, February 23, 2024, 16:32 [IST]
Other articles published on Feb 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+