Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 3வது டெஸ்டில் இந்தியாவுக்கு பின்னடைவு.. கேஎல் ராகுல் விலகல்.. ஐபிஎல் ஸ்டாருக்கு அழைப்பு

ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தற்போது பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் தொடர் சமனில் இருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ் காட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே விராட் கோலி வரமாட்டேன் என அறிவித்துள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் இருந்து மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

India vs England - KL Rahul ruled out from 3rd test and devdutt padikkal called in

இந்த நிலையில் கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் அவருடைய உடல் தகுதி 100% நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கே எல் ராகுல் பயிற்சியில் ஈடுபட்டார் என்று செய்திகள் வெளியானது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இடத்தில் கே.எல். ராகுல் நம்பர் நான்காவது வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு தற்போது முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வேறு இடத்தில் வலி இருக்கிறது என்று கூறி தான் அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடாமல் விலகி இருந்தார். தற்போது முட்டி பகுதியில் காயம் இருப்பதாக கூறி இருக்கிறார். இதனால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.அவருக்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த முன்னாள் ஆர் சி இ வீரர் படிக்கல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

படிக்கல் தற்போது ரஞ்சி தொடரில் நன்றாக விளையாடி வருகிறார். இவர் ரஞ்சிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசி அசத்தினார். இதே போன்று இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான இந்தியா ஏ ஆட்டத்தில் படிக்கல் 105 ரன்கள் அடித்திருந்தார். நடப்பு ரஞ்சி தொடரில் படிக்கல் 556 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரியாக 92 ரன்கள் அடித்துள்ளார்.

இந்த தொடரில் மூன்று சதம் அவர் அடித்திருக்கிறார். படிக்கல் முதல் முறையாக டெஸ்ட் அணியில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறார். இதுவரை 31 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல் 227 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரியாக 44.54 நாள் வைத்திருக்கிறார். இதுவரை இந்திய அணிக்காக இரண்டு சர்வதேச t20 போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அணியில் சர்பிராஸ்கான் காயத்திலிருப்பதால் தற்போது பிளேயிங் லெவனில் கே எல் ராகுலுக்கு பதிலாக விளையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, February 12, 2024, 19:45 [IST]
Other articles published on Feb 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+