For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG -முதல் டெஸ்டில் தோற்பது தான் ராசியே.. ஒரு அடி தான் விழும்.. இந்திய அணியின் செயல்பாடு

IND VS ENG : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒரு விசித்திரமான ரெக்கார்டை படைத்திருக்கிறது. அதாவது எம்ஜிஆர் படத்தில் வில்லன்கள் ஹீரோ எம் ஜி ஆர் ஐ முதல் அடியை அடிப்பார்கள். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆர் தான் வில்லன்களை அடித்து நொறுக்குவார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் போட்டியை தோற்றபிறகு சீரி எழுந்து தொடரை கைப்பற்றி இருக்கிறது.

தற்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கூட ஹைதராபாத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி தொடர்ந்து அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்று இருக்கிறது. இப்படி செய்திருப்பது இந்தியாவுக்கு ஏழாவது முறையாகும்.

India vs England - List of test series win for india after losing first match

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு தொடரில் முதல் போட்டியை தோல்வியை தழுவிய பிறகு அந்த தொடரை எவ்வாறு வென்றிருக்கிறது என்பதை தற்போது பார்க்கும். இப்படி ஒரு பழக்கத்தை இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 1972 ஆம் ஆண்டு தான் தொடங்கியது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2000 ஆம் ஆண்டு இந்தியா முதல் போட்டியை தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளை வென்று அசத்தியது.

இதேபோன்று 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து இரண்டிலும் வென்று இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 2016- 17ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா முதல் டெஸ்ட்டில் தோற்றது.

ஆனால் அதன் பிறகு இரண்டு டெஸ்டில் வென்று இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் தொடரை கைப்பற்றியது. இதேபோன்று 2020-21 ஆம் ஆண்டில் முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. ஆனால் அதன் பிறகு இரண்டு போட்டிகளை வென்று இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றது. 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அதன் பிறகு மூன்று போட்டிகளிலும் வென்று மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றது. தற்போது அதே பார்முலாவை தான் இந்தியா பயன்படுத்தியிருக்கிறது.

Story first published: Tuesday, February 27, 2024, 8:00 [IST]
Other articles published on Feb 27, 2024
English summary
India vs England - List of test series win for india after losing first match IND vs ENG -முதல் டெஸ்டில் தோற்பது தான் ராசியே.. ஒரு அடி தான் விழும்.. இந்திய அணியின் செயல்பாடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+