Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை பார்த்து காப்பி அடித்த இங்கிலாந்து.. திட்டத்தை மாற்றிய பென் ஸ்டோக்ஸ்.. ஆபத்தா? ஈஸியா?

ராஜ்காட் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தங்களுடைய திட்டத்தை முற்றிலுமாக மாற்றி இருப்பது, கிரிக்கெட் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

காரணம் இந்திய மண்ணில் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி தான் கடைசியாக தொடரை வென்றது. அதன் பிறகு எந்த அணியும் டெஸ்ட் தொடரை இந்தியாவின் சொந்த மண்ணில் வீழ்த்தியதில்லை. இதனால் இந்த தொடரை உலகக் கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள் ஒப்பிட்டு விளையாடி வருகிறார்கள்.

India vs England - Mark wood is to return to playing xi for 3rd test as ben stokes changed strategy

முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டியிலுமே இங்கிலாந்து அணி ஒருவேக பந்துவீச்சாளர் மற்றும் நான்கு சுழற் பந்துவீச்சாளர் என்ற திட்டத்தை வைத்து தான் விளையாடியது. இரண்டாவது டெஸ்டில் சோயிப் பஷீர் என்ற இளம் வீரரை களம் இறக்கியது.

அவரும் ஒரு அளவுக்கு டீசன்டாகவே விளையாடினார். இரண்டாவது டெஸ்டில் அவர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலுமே இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடியது. தற்போது இந்தியாவின் திட்டத்தை காப்பி அடித்துள்ள இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்டில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை களம் இறக்கப் போகிறது.

இது தொடர்பாக பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி இன்று அறிவித்திருக்கிறது. இரண்டாவது டெஸ்டில் அறிமுகமான சோயிப் பஷிர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் களமிறக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மார்க் வுட் எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இன்னும் இரண்டாவது டெஸ்டில் ஆண்டர்சன் சிறப்பாக செயல்பட்டார். இரண்டாவது டெஸ்டில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்டில் ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் என இரண்டு வேக பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்க இங்கிலாந்து முடிவு எடுத்துள்ளது. இதேபோன்று ரேஹான் அகமத் மற்றும் டாம் ஹார்ட்லி என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள், தேவைப்பட்டால் ஜோ ரூட்டை மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக பயன்படுத்தவும் முடிவு எடுத்துள்ளார்.

ராஜ்காட் ஆடுகளத்தில் லேசாக புற்கள் இருக்கிறது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என பென் ஸ்டோக்ஸ் நம்புகிறார். தங்களது பலம் வேகப்பந்துவீச்சுதான் என்பதை புரிந்து கொண்டு தற்போது இங்கிலாந்து அணி திட்டத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. இரண்டு வேக பந்துவீச்சாளர்களை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது நாளை தான் தெரியவரும்.

Story first published: Wednesday, February 14, 2024, 18:18 [IST]
Other articles published on Feb 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+