Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இங்கிலாந்து ODI தொடர் என்று துவங்கும்? போட்டி தேதி, நேரம் மற்றும் வீரர்கள் விவரம்

நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் பிப்ரவரி 6 முதல் துவங்க உள்ளது, முதல் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது.

அந்தத் தொடரை இந்திய அணி 4 - 1 என வென்றது. இந்த நிலையில் ஒருநாள் தொடரை வென்று பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி முயற்சிக்கும் என்பதால் ஒருநாள் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொடரில் நடைபெற உள்ள மூன்று போட்டிகள் எந்தெந்த மைதானங்களில், எந்தெந்த தேதிகளில் நடக்கிறது? என்பதை பார்க்கலாம்.

India vs England ODI Series date time and squad details

முதல் ஒருநாள் போட்டி - பிப்ரவரி 6, 2025 - நாக்பூர் - விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்

இரண்டாவது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 9, 2025 - கட்டாக் - பாரபதி ஸ்டேடியம்

மூன்றாவது ஒருநாள் போட்டி - பிப்ரவரி 12, 2025 - அகமதாபாத் - நரேந்திர மோடி ஸ்டேடியம்

இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் பகல் - இரவு போட்டிகளாக நடைபெறும். இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு இந்தப் போட்டிகள் துவங்கும்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் விவரம் -

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா

IND vs ENG: டி20 வரலாற்றிலேயே படுமோசமான ரெக்கார்டு.. தலை குனிந்த இங்கிலாந்து.. இதெல்லாம் தேவையா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி விவரம் -

ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், ஃபிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்

Story first published: Tuesday, February 4, 2025, 14:48 [IST]
Other articles published on Feb 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+