Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு! இளம் வீரர்களை கொண்டாடிய ரசிகர்கள்.. ஓரமாக புஜாரா செய்த வேலை

ராஜ்காட் : இந்திய கிரிக்கெட் அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி பல சாதனைகளை படைத்தவர் தான் புஜாரா. புஜாரா கடந்த ஆண்டு இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாத புஜாரா தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் கடுமையான பயிற்சியை செய்து வருகிறார்.

நடப்பு சீசனில் மட்டும் இரட்டை சதம் சதம் என 600 ரன்களுக்கு மேல் புஜாரா அடித்திருக்கிறார். எனினும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் புஜாராவின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போட்டி நடைபெற்றது.

India vs England - Pujara took part in net practice alone while india playing in ground

ராஜ்காட்டில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். இந்த போட்டியை புஜாரா நேரில் வந்து பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இது குறித்து பேசிய அஸ்வின் புஜாரா தங்களை விருந்துக்கு அழைத்துச் செல்வார் என நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.

மைதானத்திற்கு வந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் ரோகித் சர்மா,ஜடேஜா சர்பிராஸ்கான் போன்றோரின் ஆட்டத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்த நிலையில் மைதானத்தின் வெளியே ஒரு ஓரத்தில் புஜாரா தன்னுடைய பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு இருந்தார். தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் எப்படியாவது மீண்டும் இந்திய அணிக்குள் வர வேண்டும் என்ற வெறியில் புஜாரா இந்த பயிற்சியை மேற்கொண்டார்.

அடுத்த ரஞ்சி போட்டியில் ரன் அடிக்க வேண்டும் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் புஜாரா உள்ளூர் பவுலர்களை வைத்துக்கொண்டு தன்னுடைய வலை பயிற்சியை செய்து வந்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும் டெஸ்ட் போட்டியில் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அணிய இடம் பிடிப்பதற்காக புஜாரா தனிமையில் இந்த பயிற்சியை செய்தார். இதன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து பல ரசிகர்களும் வேதனை அடைந்தனர். உங்களுடைய பயிற்சியை தனிமையில் செய்யுங்கள்! உங்களுடைய வெற்றியை உலகம் கொண்டாடும் என்ற பழமொழிக்கு ஏற்ப புஜாரா இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தமக்கு பிடித்த டெஸ்ட் போட்டியை கூட காணாமல் தன்னுடைய சொந்த பயிற்சியை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக கிரிக்கெட் வல்லுனர்களும் கூறி வாழ்த்தி உள்ளனர்.

புஜாராவை இப்படி தனிமையில் பார்க்க கஷ்டமாக இருக்கிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் புஜாராவை போல் நாமும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அவரை ஒரு ரோல் மாடலாக பேசி வருகின்றனர். புஜராவுக்கு சொந்தமான இடத்தில் களம் இறங்கி கில் சொதப்பி வரும் நிலையில் திறமை வாய்ந்த புஜாராவுக்கு அந்த இடம் கிடைக்கவில்லை என்றும் அதனை மீட்பதற்காக புஜாரா வெறி கொண்டு இருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, February 16, 2024, 7:30 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+