Rajat Patidar: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்காட்டில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத படி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி பரிதாபமான நிலையில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கடந்த போட்டியில் சதம் அடித்த கில் இந்த போட்டியில் டக் அவுட் ஆகியும் வெளியேறினார். இதனால் ரோகித் சர்மாவுடன் ரஜத் பட்டிதார் ஜோடி சேர்ந்தார். பட்டிதாருக்கு இது இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரஜத் பட்டிதாரின் ஆர்சிபி ரசிகர்கள் இந்த போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் காண காத்திருந்தார்கள். பட்டிதார் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி பெயரை பெற்றார். எனினும் அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாடி இருக்கிறார். இதுபோன்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட அவர் சதம் அடித்தார்.
எனினும் டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதை தற்போது உள்ள இளம் வீரர்கள் மறந்து விடுகின்றனர். எடுத்தவுடனே அதிரடியாக ஆட வேண்டும் என நினைத்து ரஜத் பட்டிதார் ஒரு மோசமான ஷாட்டை ஆடி ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி தன்னுடைய முதல் ஓவரை வீசத் தொடங்கினார்.அப்போது அந்த பந்தை கவரில் தொட, அது நேராக ஃபீல்டரிடம் கேட்ச் ஆனது. இதனால் மிகவும் ஏமாற்றத்துடன் ரஜத் பட்டிதார் பெவிலியன் திரும்பினார்.
கவனக்குறைவால் ரஜத் பட்டிதார் இது போன்ற ஒரு சாட்டை ஆடி ஏமாற்றம் கண்டார். முதலில் ஆடுகளம் எப்படி செயல்படுகிறது விக்கெட்டுகள் விழுந்தால் எப்படி விளையாட வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்து கொண்டு ஆடி இருந்தால் நிச்சயம் இந்த ஆடுகளத்தில் ரன் சேர்க்க முடியும். அனுபவமின்மை காரணமாக தான் தற்போது பட்டிதார் ஆட்டம் இருந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த டெஸ்டில் கே எல் ராகுல் திரும்பினால் பட்டிதார் இடத்திற்கு ஆபத்து ஏற்படும்.