தோனி, டிராவிட் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்.. யாரும் தொட முடியாத புது உச்சம்.. ரசிகர்கள் வியப்பு!
மேன்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் டாப் ஆர்டரே சரிந்தபோதும், சதமடித்தது எப்படி என ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.
மேன்செஸ்டரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
260 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்திய அணி பேட்டிங்
ரோகித் சர்மா (17), ஷிகர் தவான் (1), விராட் கோலி (17 ), சூர்யகுமார் யாதவ் (16) சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் இந்திய அணி 72 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி தேடிக் கொடுத்தனர்.

அதிரடி சதம்
அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 113 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 125 ரன்களை விளாசினார். இதில் டேவிட் வில்லியின் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

புது சாதனை
இந்நிலையில் இந்த பேட்டிங்கின் மூலம் முக்கிய சாதனைகளை பண்ட் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். 2005ம் ஆண்டு இலங்கையுடனான போட்டியில் அவர் 183 ரன்கள் அடித்திருந்தார். 2வது இடத்தில் ராகுல் டிராவிட் வெஸ்ட் இண்டீஸுடன் 109* ரன்கள் அடித்து இருந்தார். ஆனால் டிராவிட்டை முந்தி தற்போது ரிஷப் பண்ட் 125* ரன்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

தோனி ரெக்கார்ட் உடைப்பு
SENA நாடுகளில் நடைபெற்ற போட்டிகளை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தான் டாப்பில் உள்ளார். எம்.எஸ்.தோனி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் 87 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் பண்ட் தற்போது அவரை முந்தி சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications