For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி சாதனையை சமன் செய்த ரோகித்.. டிராவிட் சாதனை முறியடிப்பு.. ஜெய்வால், அஸ்வின், ஜூரலும் ரெக்கார்ட்

IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களும்ழ்இந்திய அணி 307 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் சுருண்டது.

இதனை அடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, அஸ்வின், ஜெய்ஸ்வால் ,துருவ்ஜூரில் போன்ற வீரர்கள் பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

India vs England - Rohit sharma equals MS Dhoni record as Jaiswal - Ashwin - Dhruv jurel also achieved

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் வரிசையில் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட்டை முந்தினார். டிராவிட் இந்திய கேப்டனாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒன்பது வெற்றிகளை பெற்றிருக்கிறார். இதன் மூலம் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார்.

முதல் இடத்தில் 40 வெற்றிகள் உடன் விராட் கோலி, 27 வெற்றியுடன் தோனியும், 21 வெற்றியுடன் கங்குலியும் ,14 வெற்றிகளுடன் அசாருதீன் உள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மா ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது தோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார். தோனி இதுவரை 298 போட்டிகளில் இந்திய அணி வெற்றியில் அங்கம் வகித்த நிலையில், தற்போது இந்த சாதனையை ரோகித் சர்மா சமன் செய்து இருக்கிறார்.

இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். 72 வெற்றிகளில் சச்சின் முதலிடத்திலும், 59 வெற்றிகளில் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் அஸ்வின் 58 வெற்றிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இதைப் போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வினும், ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயானும் தற்போது முதலிடத்தில் இருக்கிறார்கள். இருவரும் தலா 9 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். அதேபோன்று அதிக முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 35 முறை வீழ்த்தி கும்ப்ளேவின் ரெக்கார்டை சமன் செய்திருக்கிறார்.

இலங்கை வீரர் ரங்கனா ஹேராத் (34 முறை) முறியடித்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடி துருவ் ஜூரல் மூன்றாவது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் முதலிடத்தில் தோனி, இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி தோனி ஆட்ட நாயகன் விருதை வென்ற நிலையில் தற்போது துருவ் ஜூரில் அதே நாளில் இந்த விருதை கைப்பற்றி இருக்கிறார்.ஜெய்ஸ்வாலை பொருத்தவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு போட்டியில் முடிவில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பிராட்மேனும், இரண்டாவது இடத்தில் ஹர்பர்ட் என்ற வீரரும் மூன்றாவது இடத்தில் ஜெய்ஸ்வாலும் உள்ளனர்.

Story first published: Tuesday, February 27, 2024, 7:31 [IST]
Other articles published on Feb 27, 2024
English summary
India vs England - Rohit sharma equals MS Dhoni record as Jaiswal - Ashwin - Dhruv jurel also achieved தோனி சாதனையை சமன் செய்த ரோகித்.. டிராவிட் சாதனை முறியடிப்பு.. ஜெய்வால், அஸ்வின், ஜூரலும் ரெக்கார்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+