Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘சதத்திற்கு பின்னால் எவ்வளவு வலிகள்’... வைரலாகும் ரோகித்தின் புகைப்படம்.. மனம் கலங்கிய ரசிகர்கள்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 4வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்தது.

இதன்பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 291 ரன்களை குவித்தது. 101 ரன்கள் பின் தங்கிய சூழலில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுத்தது.

அட்டகாசமான சதம்

அட்டகாசமான சதம்

இந்திய அணியின் கம்பேக்கிற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ரோகித் சர்மா. சிறப்பாக விளையாடி வந்த அவர், சதம் விளாசி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இது அவருக்கு ஒரு ஸ்பெஷலான சதமாகும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல்நாட்டு மண்ணில் இதுவரை சதம் விளாசியது இல்லை. எனவே அயல்நாட்டு மண்ணில் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

 விமர்சனம்

விமர்சனம்

டி20, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட லாயக்கியில்லை, அப்படி விளையாடினாலும் இந்தியாவில் விளையாட தான் சரிபட்டு வருவார் என விமர்சனங்கள் இருந்து வந்தன. அவை அனைத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

ரோகித்திற்கு காயம்

ரோகித்திற்கு காயம்

இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா சதமடித்தார் என்று ரசிகர்கள் கொண்டாடினாலும், அதற்கு பின்னால் அவருக்கு ஏற்பட்ட காயம் மிகப்பெரியது. 200 பந்துகளுக்கும் மேல் சந்தித்த அவர், பல்வேறு பந்துகளை தனது உடலில் வாங்கிக்கொண்டார்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ரோகித் சர்மாவின் கால் தொடைப் பகுதி முழுவதும் பந்துக்களால் அடிவாங்கப்பட்டு சிவந்து காணப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மனம் கலங்கி ட்விட்டரில் ஆறுதல் பதிவுகளை செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, September 5, 2021, 17:35 [IST]
Other articles published on Sep 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+