Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரில் மட்டும் நல்லா வீசுறியே எப்படி? நேரலையில் ஜடேஜாவை கடிந்த ரோகித் சர்மா

ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா நான்கு ஓவரில் இரண்டு நோ பால் வீசியதால் கேப்டன் ரோகித் சர்மா கடுப்பானார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில், இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இந்தியா 445 ரன்கள் அடித்தும், அது வெற்றிக்கு போதாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

India vs England - Rohit sharma made hilarious comment after jadeja bowls no ball

குறைந்தபட்சம் இந்தியா 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் தற்போது இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தியாவில் பந்துவீச்சு கொஞ்சம் கூட எடுபடவில்லை.

இங்கிலாந்து வீரர்கள் ஏதோ டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரன்களை சேர்த்து வருகிறார்கள். தற்போது இந்தியாவை விட 238 ரன்கள் தான் அவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இதனால் விரைவாக விக்கெட் எடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா இருக்கிறது இந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர்களின் பங்கு விக்கெட்டுகளை எடுக்க மிகவும் முக்கியமாகும்.அப்போது ஜடேஜா பந்து வீசியபோது நான்கு ஓவர்களில் இரண்டு முறை நோபால் வீசிவிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நோபால் வீசுவது என்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த பந்தில் விக்கெட் விழுந்து அது கடைசியில் நோபால் என அறிவிக்கப்பட்டால் அவ்வளவு எரிச்சல் வீரர்களுக்கு இருக்கும்.மேலும் பவுலர்களின் தன்னம்பிக்கையும் குலையும். இந்த நிலையில் ஜடேஜா இரண்டாவது நோபால் வீசியபோது கேப்டன் ரோகித் சர்மா கடுப்பானார்.

அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜாவை பார்த்து," நீ ஐபிஎல் தொடரில் விளையாடும் போது கூட இத்தனை நோபால் வீசியது கிடையாதே! என்று கிண்டல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் "இதை டி20 கேம் என்று நினைத்துக் கொண்டு பந்து வீசு என்று கூறி சிரித்தார். கேப்டன் மறைமுகமாக தம்மை எச்சரிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ஜடேஜா மீண்டும் பந்து வீச சென்றார். ரோகித்தின் இந்த பேச்சு ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

Story first published: Friday, February 16, 2024, 19:39 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+