Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?டிரெண்ட்டிங்கில் சர்பிராஸ் தந்தை ஜெர்சி.. மறைமுக தாக்கு

ராஜ்காட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சர்பிராஸ் கான் அறிமுகமாகி இருக்கிறார். சர்பிராஸ் கான் அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்த நிலையில் சர்பிராஸ் கான் தன்னுடைய 26 ஆவது வயதில் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக சர்பிராஸ் கான் வாய்ப்புக்காக போராடிய நிலையில் தற்போது அது கிடைத்திருக்கும் இந்த தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் சர்பிராஸ் கானின் தந்தை ஒரு ஜெர்சி அணிந்திருந்தார். அதுதான் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

india vs england - Sarfaraz khan father jersey attracts fans in rajkot test

அதில் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்ற வாக்கியம் இடம்பெற்று இருக்கிறது. அதில் ஜென்டில்மேன் என்ற வார்த்தையை அடித்து விட்டு அதன் மேல் அனைவருக்குமான என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் கிடையாது, அனைவருக்குமான விளையாட்டு என்று அதில் இடம்பெற்றிருக்கிறது.
இது ஒரு மிகப்பெரிய அரசியல் கருத்தாக பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் என்றால் ஜென்டில்மேன் தான் விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து தங்களுடைய ஆரம்ப காலத்தில் ஒரு எழுதப்படாத விதியை வைத்திருந்தது. இதனால் தான் கிரிக்கெட் இங்கிலாந்து அரசு ஆண்ட நாட்டில் மட்டும் முதலில் வெள்ளையர்களால் விளையாடப்பட்டது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாட்டினர் விளையாட தொடங்கினர்.

அதிலும் இந்தியா போன்ற நாட்டில் கிரிக்கெட் , முதலில் ராஜாக்களால் விளையாடப்பட்டது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ள நபர்கள் தான் கிரிக்கெட்டை விளையாடினார்கள். கேட்டால் இது ஜென்டில்மேன் கேம் என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் வீரராக மாறலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

கிரிக்கெட் என்றால் ஒரு சிலர்தான் விளையாட முடியும் என்ற காலம் தற்போது பெரும் அளவு மாறி இருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக தான் சர்பிராஸ் கான் விளங்குகிறார். இதனால் பெரிய ஒரு அரசியல் கருத்தை மிக சுருக்கமாக தன்னுடைய ஜெர்சியில் சப்ராஸ் கானின் தந்தை நவுசத் கான் வெளிப்படுத்தி விட்டார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சப்ராஸ் கான்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தான் அவர் எழுதி இருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஜென்டில்மேன் என்று கூறி சமுதாயத்தில் இருக்கும் சில தரப்பினரை கிரிக்கெட் பேட்டை செய்த காலத்தை அடித்து உடைக்கும் நிகழ்வாகவே சர்பிராஸ் கானின் தந்தையின் ஜெர்சி பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, February 15, 2024, 12:14 [IST]
Other articles published on Feb 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+