2 முக்கிய வீரர்களை இழக்கிறதா இந்தியா.... 2வது போட்டியில் சிக்கல்..முக்கிய ஐபிஎல் அணிக்கும் பதற்றம்
புனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இரண்டு முக்கிய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.

முதல் ஒருநாள் போட்டி
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் 2 வீரர்கள் இருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியின் போது தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு காயம் காயமடைந்தனர்.

காயம்
தொடக்க வீரர் ரோகித் சர்மா பேட்டிங் செய்த போது வலது கை மூட்டுப்பகுதியில் காயமடைந்தார். பின்னர் வலி அதிகரித்ததால் ரோகித் சர்மா ஃபீல்டிங்கில் ஈடுபடவில்லை. அதே போல ஸ்ரேயாஸ் பில்டிங் செய்தபோது இடது கை தோள்பட்டையில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் 8வது ஓவரில் டைவ் அடித்து பந்தை தடுத்தபோது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் அதன் பிறகு ஃபீல்டிங்கிற்கு வரவில்லை.

சந்தேகம்தான்
இந்நிலையில் இவர்களின் காயம் குறித்து மருத்துவர்கள் ஸ்கேன் செய்யவிருப்பதாகவும். அதன் பின்னர் அணிக்கு திரும்புவார்களா என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. எனினும் 2வது ஒருநாள் போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இவர்கள் காயம் முழுமையாக குணமடைந்து போட்டியில் பங்கேற்பது சந்தேகம்தான்.

ஸ்ரேயாஸ்
ரோகித் சர்மாவுக்கு கூட காயம் பெரியளவில் இல்லை என்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எலும்பில் நல்ல காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர் ஐபிஎல் போட்டியிலும் முதல் சில ஆட்டங்களில் பங்கேற்காமல் போக வாய்ப்புள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனாக உள்ளார். கேப்டனுக்கே காயமா என அந்த அணி நிர்வாகமும் பதற்றத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications