
முதல் ஒருநாள் போட்டி
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மீதமுள்ள 2 ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.

காயம்
இந்த போட்டியின் போது இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ரோகித்திற்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாத நிலையில் ஸ்ரேயாஸின் நிலைமை மோசமாக உள்ளது. ஆட்டத்தின் 8வது ஓவரில் பேர்ஸ்டோ அடித்த பந்தை டைவ் அடித்து தடுத்தபோது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் ஃபீல்டிங்கிற்கு வரவில்லை. உடனடியாக அவருக்கு மருத்துவர்களால் அழைத்துச்செல்லப்பட்டார்.

நீக்கம்
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் 2 அல்லது 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் மீதமுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒரு வேளை ஸ்ரேயாஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருந்தால் அவர் 2 அல்லது 3 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். இதனால் ஐபிஎல் தொடரிலும் ஆட முடியாத சூழல் நிலவுகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ்
நடிகை ஹன்ஷிகா மோத்வானி குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் இணைந்திருக்கிறார். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி, முஷ்கான் உடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச் 20,21 தேதிகளில் உதய்பூரில் உள்ள Royal Retreat ல் நடைபெற்றது. இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications