IND VS ENG : நமது வீட்டில் எல்லாம் சில குழந்தைகளை ராஜா வீட்டு கண்ணு குட்டி என்று சொல்வார்கள். அந்த நபர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டியதை எப்படியாவது சாதித்துக் கொள்வார்கள். அதேபோல் தான் இந்திய அணியில் ராஜா வீட்டு கன்னுக்குட்டி போல் சுற்றித்திரிந்தார் கில்.
அண்டர் 19 கிரிக்கெட்டிலே நன்றாக விளையாடி ராகுல் டிராவிட்டும் நல்ல மதிப்பை பெற்றதால் இவருக்கு அதிக மரியாதையும் சுதந்திரத்தையும் ராகுல் டிராவிட் அணியில் வழங்கியிருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி அவருக்கென்று ஒரு இடத்தை அணியில் பிடித்துக் கொண்டார்.

எனினும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லால் விளையாட முடியவில்லை. இந்த நிலையில் பந்து புதியதாக இருப்பதால் தம்மால் அதிக ரன் சேர்க்க முடியவில்லை என்று கூறி ராகுல் டிராவிட் இடம் கேட்டு நம்பர் மூன்றாவது இடத்திற்கு கில் வந்தார்.
ஆனால் தாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல் கில்லுக்கு கொஞ்சம் கூட அந்த இடம் செட் ஆகவில்லை. இதற்கு ஓபனிங் தேவலாம் போல என்ற ரேஞ்சுக்கு தள்ளப்பட்டார். சரி நமக்கு மூன்றாவது இடம் சரி வராது பேசாமல் ஓபனிங் சென்று விடுவோம் என்று திட்டத்தில் இருந்தார். அப்போதுதான் அவர் எதிர்பார்க்காதபடி தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் கில்லை விட அபாரமாக அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
வந்த கொஞ்ச நாட்களிலே சதம், அரை சதம் என பட்டையை கிளப்பியுள்ள ஜெய்ஸ்வால், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அதில் பாதிக்கு மேல் ஜெய்ஸ்வால் அடித்திருக்கிறார். தற்போது ஜெய்ஸ்வால் 257 பந்துகளை எதிர் கொண்டு 179 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதில் 17 பவுண்டரிகளும் ஐந்து இமாலய சிக்சர்களும் அடங்கும். இது தற்போது கில்லுக்கு ஆப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தான் தொடக்க வீரராகவே போய் விடுகிறேன் என்று கில் கேட்க இருந்தார். தற்போது அந்த இடத்தில் ஜெய்ஸ்வால் உறுதி செய்து கொண்டதால் கில்லுக்கு நான்கு பக்கமும் கதவை அடைத்தது போல் ஆயிற்று. தற்போது கில்லுக்கு முன் இரண்டு வழி தான் இருக்கிறது.
ஒன்று விராட் கோலிக்கு பிறகு நம்பர் ஐந்தாவது இல்லை ஆறாவது இடத்தில் விளையாடுகிறேன் என்று கூறி இன்னும் கீழே செல்லலாம். இல்லையெனில் அணியை விட்டு வெளியே சென்று தமக்கு இருக்கும் பேட்டிங் வீக்னஸை சரி செய்து கொண்டு மீண்டும் அணிக்குள் வரலாம். இப்படி நான்கு பக்கமும் கேட் போட்டு அடைத்து விட்டார்களே என்று ரசிகர்கள் கில்லை கிண்டல் செய்து வருகிறார்கள்.