நாங்க திமிரா இருக்கிறோமா? அப்படி நினைத்தாலும் கவலை இல்லை.. சுப்மன் கில் அதிரடி பேச்சு
Ind vs Eng : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த இளவரசர் என்று ரசிகர்கள் சுப்மன் கில்லை புகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய கில் இரண்டாவது போட்டியில் சதம், மூன்றாவது டெஸ்டில் அபார ஆட்டம் என அடுத்தடுத்து ரன்களை சேர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் பலரும் கொஞ்சம் திமிராக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.

இந்த பேட்டியில் கில் பேசியது பின்வருமாறு, நாங்கள் எப்போதெல்லாம் இந்தியாவில் விளையாடுகிறோமோ அப்போதெல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படுகிறது. இதன் மூலம் ஜடேஜா ழ்அஸ்வின் போன்றவர்கள் எல்லாம் எப்படியாவது விக்கெட்டுகளை எடுத்து விடுவார்கள்.
ஆனால் இந்த முறை எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விராட் கோலியை போல் பும்ரா அணியில் இல்லை என்றால் நிச்சயமாக அது பெரும் பின்னடைவாக தான் இருக்கும். தற்போது அவர் எங்களுடைய பௌலிங் படையை தலைமையேற்று நடத்தி வருகிறார். சிராஜை எடுத்துக் கொண்டால் அவர் முக்கிய கட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்திய ஆடுகளத்தில் அவர்கள் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். விராட் கோலி இல்லாதது எங்களுக்கு மைனஸ் ஆக இருந்தாலும் சர்பராஸ்கான் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி அசத்தியிருக்கிறார்.
இளம் வீரர்கள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார்கள். நான்காவது டெஸ்டில் பும்ராவும் இல்லை. இதனால் இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்து தற்போது அதனை சிறப்பாக பயன்படுத்துவார்கள். அவர்கள் இதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். இளம் வீரர்கள் அடக்கமாக நடந்து கொள்ளவில்லை என்று விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு அடக்கமாக இல்லாமல் இருப்பதில் எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை. ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரண்டு முறை இரட்டை சதம் அடித்திருக்கிறார்.
அவரிடம் திறமை இல்லை என்றால் நிச்சயம் அவரால் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதம் அடித்திருக்க முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் இப்படி அடுத்தடுத்து இரட்டை சதம் அவ்வளவாக அடித்தது கிடையாது. எட்டு மற்றும் ஒன்பது டெஸ்ட் தான் அவர் விளையாடி இருப்பார். இப்போது அவருடைய திறமை என்னவென்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று கில் பாராட்டியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி 23ஆம் தேதி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications