IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இடத்தில் இந்தியா விளையாடியது.
அப்போது கில் அபாரமாக விளையாடி 124 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்கள் சேர்த்தார். மேலும் துருவ் ஜூரல் 39 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக நான்காவது டெஸ்டில் வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய சுப்மன் கில், இந்த போட்டியில் நாங்கள் கடும் அழுத்தத்தை சந்தித்தோம். எங்களை இங்கிலாந்து பவுலர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார்கள். எனினும் எங்களுடைய தொடக்க வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு நல்ல அடித்தளத்தை போட்டுக் கொடுத்தார்கள்.
இதேபோன்று எனக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதன் மூலம் என் மீது இருந்த அழுத்தம் குறைந்தது. இதை அடுத்து சூழலுக்கு தகுந்தார் போல் இன்னிங்ஸை கட்டமைக்க நாங்கள் திட்டமிட்டோம். இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரியை விடக்கூடாது என்பதற்காக எல்லைக்கோட்டில் நின்று கொண்டார்கள். எனவே இதனை ஒரு வாய்ப்பாக கருதி நாங்கள் சிங்கிள்ஸ்களை அதிகம் எடுக்க தொடங்கினோம்.
துருவ் ஜூரல் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடினார். அவர் எந்த மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலையை நானும் ஏற்படுத்திக் கொண்டேன். நான் இந்த தொடரில் அதிகம் LBW ஆனேன். இதனால் LBW ஆகிவிடக் கூடாது என்று நான் எண்ணினேன். இதன் காரணமாக என்னுடைய கால்களை நான் பயன்படுத்தி பேட்டிங் செய்யும்போது இறங்கி வந்து ரன்கள் சேர்த்தேன்.
இதன் மூலம் எனக்கு இங்கிலாந்து விரித்த வலையில் இருந்து தப்பித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரை வெல்வது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த தொடரில் அனுபவ வீரர்கள் பலரும் இல்லை. முதல் டெஸ்ட்டுக்கு பிறகு கே எல் ராகுல் விலகி சென்றதும் எங்களுக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். எங்களை சுதந்திரமாக விளையாட அவர் வற்புறுத்தினார் என்று கில் கூறினார்.