For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்பு பண்ணிட்டீங்க ஜெய்ஷா.. முதல் முறையாக பொங்கிய கங்குலி.. நறுக்குனு 2 கேள்வி

Sourav Ganguly : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ஆன கங்குலி முதல் முறையாக ஜெயிஷாவுக்கு எதிராக பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தார்.

அப்போது கங்குலி தலைவர் பதவியில் இருந்தாலும் ஜெய்ஷாவை மீறி கங்குலி எதையும் செய்ய மாட்டார். இந்த நிலையில் கங்குலி அந்தப் பதவியில் இருந்து சென்ற நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக இருக்கிறார்.

India vs England - Sourav Ganguly asks tough question to Jay shah about Ishan kishan


இந்த நிலையில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ரஞ்சிப் போட்டியில் விளையாடாததால் அவர்களுடைய ஒப்பந்தம் நீக்கப்பட்டதற்கு எதிராக கங்குலி பேசி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இஷான் கிஷன் போன்ற வீரர்களிடம் ஜெய்ஷா மற்றும் ரோஜர் பின்னி இல்லையெனில் தேர்வு குழுவினர் கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும்.

இஷான் கிசன் ஒன்றும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததில்லை. மேலும் வெள்ளை நிற கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி இருக்கிறார். இந்த ஒரு முறை விளையாடவில்லை என்பதற்காக அவர் ஒரு மோசமான வீரராக மாறிவிடுவாரா என்ன? நிச்சயம் கிடையாது. டெல்லி கேப்பிட்டல் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் இம்முறை சையது முஸ்தாக் அலி கோப்பை, விஜய் ஹாசாரே கோப்பை மற்றும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடினார்கள்.

ஏன் இஷாந்த் சர்மா கூட ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினார். கலீல் அகமது கூட பல சீசன்களுக்கு பிறகு முழு ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். நான் தனிப்பட்ட முறையில் அனைத்து வீரர்களிடம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உடல் தகுதியை பெறுங்கள் என்று கூறியிருந்தேன்.

ஒரு சில வீரர்களிடம் மட்டும் தான் நான் விளையாட சொல்லவில்லை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ரஞ்சி போட்டிகள் விளையாடாமல் போவது இதுதான் முதல் முறையா? நிச்சயமாக இந்த வீரர்கள் எல்லாம் ஓய்வு நேரத்தில் ரஞ்சிப் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள். இதனால் பிசிசிஐ இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கங்குலி கூறியுள்ளார்.

Story first published: Sunday, March 3, 2024, 9:09 [IST]
Other articles published on Mar 3, 2024
English summary
India vs England - Sourav Ganguly asks tough question to Jay shah about Ishan kishan தப்பு பண்ணிட்டீங்க ஜெய்ஷா.. முதல் முறையாக பொங்கிய கங்குலி.. நறுக்குனு 2 கேள்வி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+