Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 பேரின் தவறால் வந்த வினை.. இந்தியாவின் பவுலிங் சொதப்பலுக்கு காரணம் என்ன..?? நம்பி ஏமாந்த டிராவிட்!

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு 2 வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஆதிக்கம் இருந்த போதும், 2வது இன்னிங்ஸில் படு மோசமாக சொதப்பி தோல்வியை தழுவியுள்ளது.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

இந்திய அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து தோல்வியடைந்ததே கிடையாது. இந்த முறையும் 378 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்ததால், ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சால் வெற்றி கனவு தகர்ந்துள்ளது.

அட்டகாச பார்ட்னர்ஷிப்

அட்டகாச பார்ட்னர்ஷிப்

2வது இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. ஆனால் இதன் பின்னர் வந்த ஜோ ரூட் (142 ரன்கள் ) - ஜானி பேர்ஸ்டோ (114 ரன்கள் ) என 287 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களை கடைசி வரை ஒரு இந்திய பவுலரால் கூட பிரிக்க முடியவில்லை.

2 பேரின் காரணம்

2 பேரின் காரணம்

இந்திய அணியின் பவுலிங் சொதப்பலுக்கு முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரும் முக்கிய காரணம் எனக் கூறலாம். ஆட்டத்தின் முதல் சில ஓவர்களை ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பாக அமைத்தனர். ஆனால் மிடில் ஓவர்களில் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் லைன் மற்றும் லெந்த்தை சரியாக அமைக்கவில்லை.

பும்ராவின் சிரமம்

பும்ராவின் சிரமம்

இவர்களின் ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டி20 இன்னிங்ஸ் ஆடுவது போன்று ஓவருக்கு 10 ரன்கள் வரை அடித்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் நிறைய ரன்களை கசியவிட்டதால், வேறு வழியின்றி பும்ரா மற்றும் ஷமி ஆகியோரே தொடர்ச்சியாக பந்துவீச நேர்ந்தது. எனினும் கடுமையான அழுத்தங்கள் அவர்களுக்கு எதிரியாக அமைந்துவிட்டது.

சிரமப்பட்ட பும்ரா

பும்ராவின் சிரமம்

இவர்களின் ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டி20 இன்னிங்ஸ் ஆடுவது போன்று ஓவருக்கு 10 ரன்கள் வரை அடித்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் நிறைய ரன்களை கசியவிட்டதால், வேறு வழியின்றி பும்ரா மற்றும் ஷமி ஆகியோரே தொடர்ச்சியாக பந்துவீச நேர்ந்தது. எனினும் கடுமையான அழுத்தங்கள் அவர்களுக்கு எதிரியாக அமைந்துவிட்டது.

ஸ்பின்னர்கள் இல்லை

ஸ்பின்னர்கள் இல்லை

கடைசி 2 நாட்களில் ஸ்பின்னருக்கும் சற்று உதவியாக இருந்தது. ஜடேஜா சற்று ரன்களை கட்டுப்படுத்தினார். எனினும் அவருக்கு உறுதுணையாக மற்றொரு ஸ்பின்னர் இல்லாததால் விக்கெட்கள் எடுக்க முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசியது அவர் மட்டுமே எனக் கூறலாம். 18.4 ஓவர்களை வீசிய அவர் 62 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஓவருக்கு சராசரியாக 3.30 ரன்களை தான் கொடுத்தார்.

பவுலிங் விவரம்

பவுலிங் விவரம்

ஜஸ்பிரித் பும்ரா - 17 ஓவர்கள் - 2 விக்கெட்கள் - 74 ரன்கள் - எகானமி (4.40)

முகமது ஷமி - 15 ஓவர்கள் - 64 ரன்கள் - எகானமி (4.30 )

முகமது சிராஜ் - 15 ஓவர்கள் - 98 ரன்கள் - எகானமி (6.50)

ஷர்துல் தாக்கூர் - 11 ஓவர்கள் - 65 ரன்கள் - எகானமி (5.90 )

ரவீந்திர ஜடேஜா - 18.4 ஓவர்கள் - 62 ரன்கள் - எகானமி (3.30)

Story first published: Tuesday, July 5, 2022, 18:06 [IST]
Other articles published on Jul 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+