For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG -இந்திய பிளேயிங் XI- 3 மாற்றத்திற்கு வாய்ப்பு.. சர்பிராஸ் vs ரஜத் பட்டிதார் யாருக்கு இடம்

விசாகப்பட்டினம் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஆனால் இந்திய அணிக்கு பெரும் தலைவலி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. முதல் டெஸ்டில் நன்றாக விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா என இரண்டு வீரர்களுமே தற்போது இரண்டாவது டெஸ்டில் இல்லை. ஏற்கனவே விராட் கோலி, முகமது சமி ஆகியோர் இடம்பெறாததால் யாரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

India vs England test - 3 changes might happen in playing xi by Rohit sharma

அதேபோன்று கடந்த சில மாதங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சரியாக விளையாடவில்லை. இதனால் அவர்களை நீக்குவதா இல்லை மீண்டும் ஒரு இடம் கொடுப்பதா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வகையில் யாருக்கு இந்திய அணியில் நாளை இடம் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இருக்காது. நம்பர் மூன்றாவது வீரராக கில் இறங்குவாரா இல்லை ரஜத் பட்டிதார் இறங்குவாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்திய அணியை பொறுத்தவரை கில்லுக்கு தான் அதிக வாய்ப்பு கொடுக்கும் நான்காவது வீரராக கே.எல் ராகுல் இல்லாத நிலையில் அந்த இடத்தில் பட்டிதார் அல்லது சர்பிராஸ்கான் என இரண்டு வீரருமே கடும் போட்டியை போடுவார்கள்.

இதில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதுதான் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் விளையாடுவார். ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாக மோசமாக விளையாடி வருகிறார். ஒருவேளை கில் அல்லது ஸ்ரேயாஸ் இருவரில் ஏதேனும் ஒருவர் நீக்கப்பட்டால் ரஜத் பட்டிதார் மற்றும் சர்பிராஸ் கான் என இரண்டு பேருக்குமே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

நம்பர் ஆறாவது வீரராக கே எஸ் பரத்தும், ஏழாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. எட்டாவது வீரராக அஸ்வினும், ஒன்பதாவது வீரராக அக்சர் பட்டேலும் பத்தாவது வீரராக குல்தீப் யாதவும் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. விசாகப்பட்டினம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களை வைத்து விளையாட உள்ளது. இதனால் சிராஜ் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளராக பும்ரா 11 வது வீரராக இடம் பெறுவார்.

Story first published: Thursday, February 1, 2024, 13:22 [IST]
Other articles published on Feb 1, 2024
English summary
India vs England test - 3 changes might happen in playing xi by Rohit sharma IND vs ENG -இந்திய பிளேயிங் XI- 3 மாற்றத்திற்கு வாய்ப்பு.. சர்பிராஸ் vs ரஜத் பட்டிதார் யாருக்கு இடம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+