For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை ஏமாற்றினார்களா நடுவர்.. சண்டைக்கு சென்ற ரோகித் சர்மா.. டிஆர்எஸ் அவுட் கொடுத்தும் குழப்பம்

IND VS ENG: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டி ஆர் எஸ் அவுட் கொடுத்தும் நடுவர் செய்த குழப்பத்தால் அஸ்வினுக்கு ஒரு விக்கெட் பறிபோனது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்து இருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி வீரர் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

India vs England test - Big drama in Tom Hartley DRS decision made Rohit and ashwin angry

நான்காவது விக்கெட் எடுத்தால் 500-வது விக்கெட்டை கைப்பற்றி விடலாம் என்று உத்வேகத்தில் அவர் பந்து வீசி வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி 268 ரன்கள் 7 விக்கெட் எடுத்திருந்த நிலையில் டாம் ஹார்ட்லிக்கு அஸ்வின் பந்து வீசினார். அப்போது அஸ்வினின் பந்தை டாம் ஹார்டில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். அதில் பந்து ரோகித் சர்மாவிடம் பிடிபட்டது.

இதனை அடுத்து நடுவரிடம் அவுட் கேட்க அவரும் அவுட்டு கொடுத்து விட்டார். இதனால் அஸ்வின் 500-வது விக்கெட்டை எடுத்து விட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் டாம் ஹார்ட்லி உடனே டி ஆர் எஸ் கேட்டார். அப்போது மூன்றாம் நடுவர் டிஆர்எஸ் முறையை பரிசோதனை செய்த போது பந்து பேட்டில் படாமல் அவருடைய கையில் பட்டது தெரியவந்தது. இதனால் இது கேட்ச் கிடையாது என்று மூன்றாம் நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

எனினும் ஸ்டெம்பின் அருகே கையில் பட்டதால் இது எல் பி டபிள்யூ வா இல்லையா என்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது பந்து சரியான ஸ்டம்பிங் லைனில் பட்டு பைல்ஸை தாக்கியதாக ஹாக் ஐ கணித்தது. இவ்வாறு பந்து பைல்ஸை தாக்கும் போது கள நடுவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் முடிவாக வழங்கப்படும்.

இந்த நிலையில் டாம் ஹார்ட்லிக்கு கள நடுவர் கேச்சுக்கு தான் அவுட் கொடுத்தேன். Lbw க்கு நாட் அவுட் கொடுத்தேன் என்று கூறிவிட்டார். இதனால் கள நடுவர் நாட் அவுட் கொடுத்து விட்டார். இதனால் இது அவுட் கிடையாது என்று மூன்றாம் நடுவரும் கூறிவிட்டார். இதனால் கடுப்பான அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அப்போது கள நடுவர் தாம் எடுத்த முடிவை விவரித்தார். இது எல் பி டபிள்யூ கிடையாது என்றும் கேட்சுக்காக தான் நான் அவுட் கொடுத்தேன் என்றும் விளக்கம் அளித்தார்.

இதனை ஏற்காத ரோகித் சர்மா நீங்கள் ஒரு முறை அவுட் கொடுத்துவிட்டு பிறகு அதனை எப்படி உங்களால் மாற்ற முடியும். அதற்கு விதியில் இடம் இருக்கிறதா என கேட்டார். அதற்கு நடுவர் அப்படி பார்த்தால் நான் கேட்சுக்காக தான் டிஆர்எஸ் முடிவை எடுத்தார்கள். அது இல்லை என்று தெரிந்தவுடன் போட்டியை தொடங்குவது தான் சரி என விளக்கம் அளித்தார். இதனை அடுத்து மீண்டும் போட்டி தொடங்கியது. இதனால் அஸ்வின் 500-வது விக்கெட் எடுத்து விட்டார் என மகிழ்ச்சியிருந்த ரசிகர்களுக்கு ஆண்டி கிளைமாக்ஸ் ஆக அமைந்தது.

Story first published: Monday, February 5, 2024, 14:02 [IST]
Other articles published on Feb 5, 2024
English summary
India vs England test - Big drama in Tom Hartley DRS decision made Rohit and ashwin angryஇந்தியாவை ஏமாற்றினார்களா நடுவர்.. சண்டைக்கு சென்ற ரோகித் சர்மா.. டிஆர்எஸ் அவுட் கொடுத்தும் குழப்பம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+