For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘உயிர்பயத்த காட்டிடான் பரமா’.. அசால்டாக நின்ற அம்பயருக்கு ஜர்க் கொடுத்த புஜாரா.. வைரலாகும் வீடியோ!

ஹெடிங்லி: வழக்கமாக டொக்கு வைத்து எதிரணி வீரர்களின் பொறுமையை சோதிக்கும் புஜாரா, 3வது டெஸ்ட் போட்டியில் காட்டிய திடீர் அதிரடியால், கள நடுவருக்கு ஒரு நிமிடம் உயிர் பயமே வந்துவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக, இங்கிலாந்தோ அருமையான பேட்டிங் சூழலில் 432 ரன்கள் சேர்த்தது. வழக்கம் போல், ஜோ ரூட் சதம் (121) அடிக்க, இங்கிலாந்து அபாரமான லீடிங் சென்றது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 354 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்தியாவை 2வது இன்னிங்ஸில் சீக்கிரம் ஆல் அவுட் செய்து, 3வது நாளிலேயே ஜெயித்துவிட வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவு தவிடு பொடியானது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுப்புச்சுவர் போன்ற நின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னென்றால் சட்டீஸ்வர் புஜாரா மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அசத்தினார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

நீண்ட நாட்களாக பந்தை மற்றும் வீணடித்துவிட்டு, ரன் குவிக்காமல் இருந்து வந்த சீனியர் வீரர் புஜாரா மீது கடும் விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இன்று சீரான வேகத்தில் ரன்களை எடுத்தார். அதுவும் குறிப்பிட்ட பந்துகளுக்கு இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தார். முதலில் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த புஜாரா, பின்னர் விராட் கோலியுடன் சேர்ந்து அரைசதம் விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரோட் ஒருகட்டத்தில் 100க்கு சென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆக்ரோஷ புஜாரா

இந்நிலையில் சட்டீஸ்வர் புஜாராவை குறைத்து மதிப்பிட்டு அசால்டாக நின்ற கள நடுவர்களுக்கு ஒரு நிமிடத்தில் உயிர்பயத்தை கொடுத்துவிட்டார். ஆட்டத்தின் 79வது ஓவரை மொயின் அலி வீச, அதனை லெக் சைட் திசையில் சற்று தூக்கி அடித்தார் புஜாரா. வழக்கமாக நிதனாமாக ட்ரைவ் ஷாட்களை விளையாடும் அவர், திடீரென ஆக்ரோஷமாக அந்த பந்தை அனுகினார். இதனால் பந்து நேராக நடுவரின் உடலின் மீது பட்டு காயத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் சுதாரித்துக்கொண்ட அவர், ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா 189 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்களை குவித்தார். இதில் 15 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் விக்கெட்டிற்கு பிறகு இந்திய அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றுள்ளது. இந்திய அணியின் ஸ்கோர் 215 ரன்களாக இருந்த நிலையில் புஜாரா அவுட்டானதால் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, August 28, 2021, 17:44 [IST]
Other articles published on Aug 28, 2021
English summary
Cheteshwar Pujara gives Shock to the umpire Richard Kettleborough with pulling shot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+