For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படிப்பட்ட வீரர்கள் இருந்த அணி தெரியுமா?ரொம்ப ஏமாற்றமா இருக்கு..இந்திய அணியை வெளுத்து வாங்கிய நாணி

சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தங்களது சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை.

சுழற்பந்து வீச்சிலே பிறந்து வளர்ந்த இந்திய வீரர்களுக்கு அதனை எதிர்கொள்ள முடியாதது பெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட்டின் ஹர்ஷா போக்லே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நாணி இந்திய அணியை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

India vs England test- Cricket Analyst Nanee asks team india why Pujara and rahane sidelined

கிரிக்கெட் வர்ணனையாளரும் மற்றும் விமர்சிகருமான நாணி கிரிக்கெட்டில் உள்ள பல விஷயங்கள் குறித்து அறிவுப்பூர்வமாக பேசுவதில் கைதேர்ந்தவர். இந்த நிலையில் அவர் இந்திய அணியின் உள்ள பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் மிகச்சிறந்த இந்திய வீரர்களான கவாஸ்கர், மஹேந்திர அமர்நாத், அசாருதீன், கபில்தேவ் குண்டப்ப விஸ்வநாத்.

சச்சின் டெண்டுல்கர்,சேவாக், டிராவிட், லக்ஷ்மன், சித்து, திலீப் வெங்சர்கார் ,ரவி சாஸ்திரி போன்ற வீரர்கள் ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளர்களான வார்னே, முரளி பாகிஸ்தான் வீரர் அப்துல் காதிர், அண்டர்வுட் போன்ற வீரர்கள் எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டவர்கள் தான். இந்திய வீரர்கள் ஆனால் தற்போது உள்ள தலைமுறை சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் முறையை கண்டாலே மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

கோலி, ரோஹித் மற்றும் ஓரளவுக்கு கே எல் ராகுல் நீங்களாக மற்ற அனைத்து பேட்ஸ்மேனும் அனுபவம் இல்லாத சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள கூட தடுமாறி வருகிறார்கள். குறிப்பாக பந்து திரும்பும் போது ஆட்டமிழந்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் சுழற் பந்துவீச்சை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்திய வீரர்களான புஜாரா தற்போது அணியிலிருந்து ஓரங்கட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாக செயல்பட்டது. ஆனால் அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக அபாரமாக செயல்பட்டவர். ரஹானே இறுதி போட்டியில் 89 மற்றும் 46 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால் அவரை காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். எனினும் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டும் விளையாடும் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

இந்திய அணி இளைஞர்களை மட்டும்தான் குறி வைத்து கவனம் செலுத்த போகிறோம் என்ற முடிவு எடுத்து விட்டால் இனி ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்துவது மட்டும்தான் சிறந்த வழியாக இருக்குமே தவிர சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அவர்களுக்கு தயார் செய்து கொடுக்கக் கூடாது என்று நாணி தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, January 31, 2024, 8:26 [IST]
Other articles published on Jan 31, 2024
English summary
India vs England test (இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செய்தி) Cricket Analyst Nanee asks team india why Pujara and rahane sidelined
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+