Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - அஸ்வின் ஜடேஜா படைக்க போகும் மகத்தான சாதனை.. இந்தியாவின் நம்பர் 1 பவுலிங் கூட்டணி

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே பேட்ஸ்மேன் வைத்து சிறந்த கூட்டணி என்று ரசிகர்கள் பாராட்டுவது உண்டு இந்தியாவை எடுத்துக் கொண்டால் சச்சின்- சேவாக், சச்சின்- கங்குலி போன்ற வீரர்களை சிறந்த கூட்டணிக்கான வீரர்கள் என்று ரசிகர்கள் போற்றுவார்கள்.

அந்த வகையில் பவுலிங்கிற்கும் ஒரு கூட்டணி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பௌலிங் கூட்டணி இருக்கும். அவர்கள் ஒரு முனையில் இருந்து ஒரு பவுலிங்கும், மறுமுனையிலிருந்து வேறு ஒரு பவுலரும் கூட்டணி அமைத்து பந்து வீசி வீக்கெட்டுகளை எடுப்பார்கள்.

India vs England test cricket - Most number of Wickets in Test by Indian Pair

அப்படி பல வீரர்கள் பல அணியில் இருக்கிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் மெக்ராத் மற்றும் வார்னர் கூட்டணியை ரசிகர்கள் பாராட்டுவார்கள். இதைப் போன்று இங்கிலாந்தில் பிராட் மற்றும் ஆண்டர்சர் கூட்டணி ரசிகர்கள் சிறந்த கூட்டணி என்று பாராட்டுவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மூன்று கூட்டணி பல விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது.

இந்த வகையில் இந்த பட்டியலில் முதலிடத்தில் அணில் கும்ப்ளே ஹர்பஜன்சிங் கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணி ஒட்டுமொத்தமாக 501 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தற்போது அஸ்வின்- ஜடேஜா கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணி தற்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த கூட்டணி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் முதல் இடத்துக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இந்த டெஸ்டில் இந்தக் கூட்டணி முப்பது விக்கெட்டுகளை வீழ்த்தினால் யாருமே தொடமுடியாத அளவுக்கு முதல் இடத்தில் இடம் பிடித்து விடுவார்கள். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜாகீர் கான் ஹர்பஜன்சிங் இருக்கிறார்கள் இந்த கூட்டணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 474 விக்கெட் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 24, 2024, 16:43 [IST]
Other articles published on Jan 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+