விசாகப்பட்டினம் : இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்தாவது முறையாக கில் விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். மாமனார் விக்கெட்டையும் மருமகன் விக்கெட்டையும் ஆண்டர்சன் எடுத்து விட்டதாக சில ரசிகர்கள் எல்லை மீறி கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதற்கு காரணம் சச்சினின் மகளான சாரா டெண்டுல்கரை கில் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இருவரும் டேட்டிங் செய்வதாகவும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.

அண்மையில் கில் அக்காவும் சாரா டெண்டல்கரும் காரில் ஒன்றாக சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனால் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளப் போவதை ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். மேலும் இந்த செய்திகளுக்கு இரு தரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஆண்டர்சன் தற்போது ஆறாவது முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். உலகின் தலைசிறந்த வேக பந்துவீச்சாளராக விளங்கும் ஆண்டர்சன், சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்பது முறை வீழ்த்தி இருக்கிறார்.
2006 ஆம் ஆண்டு ஒருமுறையும், 2007 ஆம் ஆண்டு மூன்று முறையும், 2008 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2011 ஆம் ஆண்டு இரண்டு முறையும், 2012 ஆம் ஆண்டு இரண்டு முறையும் என மொத்தம் ஒன்பது முறை வீழ்த்தி இருக்கிறார். தற்போது அவருடைய மகளை காதலிப்பதாக கூறப்படும் கில் விக்கெட்டையும் ஐந்து முறை வீழ்த்தி இருக்கிறார். இதனை ஒப்பிட்டு தற்போது ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
மாமனார் மருமகன் என இருவரையும் சொல்லி வைத்து ஆண்டர்சன் விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கிறார் என்றும் ஆண்டர்சன்னை எதிர்கொள்ளும் போது சச்சினுக்கு என்ன பிரச்சனை இருந்ததோ அதே பிரச்சினை கில்லுக்கும் இருப்பதாகவும் ரசிகர்கள் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். இதனை பார்த்து மற்றொரு தரப்பினர் எல்லை மீறி போறீங்கடா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.