Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா இமேஜை கிழித்து தொங்கவிட்டார்.. கடைசி 4 வருட பேட்டிங் ரெக்கார்டை புட்டு வைத்த ஜாம்பவான்

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவி பல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜெஃப்ரி பாய் காட் ரோகித் சர்மாவை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவர் அவருடைய சிறந்த காலத்தை கடந்து வந்து விட்டார். தற்போது அவரால் சில அதிரடி கேமியோ இன்னிங்ஸ்களை ஆட முடியும்.

India vs england test- Geoffrey Boycott blast rohit sharma over his performance in test

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் சொந்த மண்ணில் அவர் வெறும் 2 சதம் தான் அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்திய அணி ரோகித் தலைமையில் ஆடுகளத்தில் மிகவும் பலவீனமான அணியாக திகழ்கிறது. இந்த இந்திய அணியை சுலபமாக வீழ்த்த தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இதைவிட ஒரு தங்கமான வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைக்காது.

இதேபோல் இந்திய அணி களத்தில் விராட் கோலி ஜடேஜா போன்ற வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்யும். குறிப்பாக ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இந்தியாவுக்கு அமையும். ஏனென்றால் அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்,நல்ல பவுலர், சிறந்த பீல்டர், முதல் டெஸ்டில் அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றும் விளங்கினார். இதேபோன்று கோலி இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு.

அவர் இந்திய மண்ணில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். சராசரியாக இந்திய ஆடுகளத்தில் அவர் 60 ரன்கள் அடித்திருக்கிறார். மேலும் விராட் கோலி களத்தில் நிற்கும் போது வீரர்கள் சோர்வாக இணைந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்குவார். கோலி இல்லாததை இங்கிலாந்து வீரர்கள் நிச்சயம் பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற வேண்டும்.இதேபோன்று இங்கிலாந்து வீரர் ஆலி போப் ஆடியது தான் வாழ்நாளில் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என்றும் பாய்காட் பாராட்டியுள்ளார்.

Story first published: Tuesday, January 30, 2024, 23:20 [IST]
Other articles published on Jan 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+