கொல்கத்தா : இந்த டெஸ்ட் மேட்சில் இந்திய டீமின் சந்து போர்டே 68 & 61 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து டீமின் கேப்டன், டெட் டெக்ஸ்டர், பீட்டர் ரிச்சர்ட்சன், இந்திய டீமின் விஜய் மெஹ்ரா, ஒவ்வொருவரும் த லா 62 ரன்கள் குவித்தனர்.இங்கிலந்து பவுலர் டேவிட் ஆலன் மொத்தம் 9 விக்கெடுக்கள் வீழ்த்தினார்.
இந்திய வீரர் சலீம் துரானி 7 விக்கெட்டுக்கள் கை பற்றினார்.இந்த டெஸ்டில்,
இங்கிலாந்து டீமில் இரண்டு வீரர்கள் அவர்களுடைய அறிமுக டெஸ்டை விளையாடினார்கள்.ஜியோப் மில்மேன் ( 0 & 4 ) ,பீட்டர் பார்பிட் ( 21 & 46 )
இந்த டெஸ்டில் ஒரு சதம் கூட இல்லை.

இந்திய டீம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய டீம் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து இருந்தனர்.
விஜய் மெஹ்ராவும், விஜய் மஞ்சுரேகரும் சில ஓவர்கள் தாக்குப் பிடித்தனர்.
விஜய் மஞ்சுரேகர் 24 ரன்களுக்கு அவுட் ஆனார். ( 4 x 4 )
50 - 2
விஜய் மெஹ்ராவும், மன்சூர் அலிகான் பட்டோடியும் சேர்ந்து விளையாடினார்கள்.
டேவிட் ஆலன் சிறப்பாக பந்து வீசினார். உடன் டோனி லாக்கும் ஸ்பின் பவுலிங்கில் தனது திறமையை வெளிப் படுத்தினார்.விஜய் மெஹ்ரா அவுட். விக்கெட் எடுத்தவர் லாக்.கேட்ச் பிடித்தவர் பார்பிட்.62 ரன்கள். ( 9 x 4 )
145 - 3
மன்சூர் அலி கான் பட்டோடி, பாலி உம்ரிகர், ஜெய் சிம்ஹா, சந்து போர்டே, சலீம் துரானி ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.
சில பார்ட்னர்ஷிப்புகளும் ஏற்பட்டன.இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய டீம் ஆல் அவுட் 380 ரன்களுக்கு.
மன்சூர் அலி கான் பட்டோடி 64 ரன்கள்
( 11 x 4 )
பாலி உம்ரிகர் 36 ரன்கள்
( 8 x 4 )
ஜெய் சிம்ஹா 37 ரன்கள்
( 6 x 4 )
சந்து போர்டே 68 ரன்கள்
( 10 x 4 )
சலீம் துரானி 43 ரன்கள்
( 8 x 4 )
இங்கிலாந்து டீமில் திறம் பட பந்து வீசியவர் டேவிட் ஆலன்
34 / 13 ./ 67. / 5
டேவிட் ஸ்மித் 2 - 60
டோனி லாக் 2 - 63
இங்கிலாந்து டீம் பேட்டிங் எதிர்பார்த்த படி அமையவில்லை.இடை இடையே அவுட் ஆகி திரும்பினார்கள், வீரர்கள் பெவிலியனுக்கு.இங்கிலாந்து டீம் ஆல் அவுட் 212 ரங்களுக்கு.ஒப்பனிங் பேட்ஸ்மேன்
பீட்டர் ரிச்சர்ட்சன் 62 ரன்கள் எடுத்தார்.
( 6 x 4 )
கேப்டன் டெக்ஸ்டர் 57
ரன்கள் எடுத்தார்.
( 8 x 4)
பீட்டர் பார்ப்பிட் 21
ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் சுமாராக
ஆடினார்கள்.
சலீம் துரானி பவுலிங்கில் அசத்தினார்
23.2 / 8 / 47 / 5
சந்து போர்டே 4 - 65
மூன்றாம் நாள் முடிவில் இந்திய டீம், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து இருந்தனர்.
மன்சூர் அலி கான் பட்டோடி 24* ரன்கள்
பரூக் என்ஜினீயர் 4*
முன்னதாக அவுட் ஆனவர்கள்
நாரி காண்ட்ராக்டர் 11ரன்கள்
( 1 x 4 )
ஜெய்சிம்ஹா 36 ரன்கள்
( 3 x 4 & 1 x 6 )
விஜய் மஞ்சுரேகர் 27 ரன்கள்
( 4 x 4 )
இந்த இன்னிங்சிலும் டேவிட் ஆலனும், டோனி லாக்கும் சிறப்பாக பந்து வீசினர்.
இருவரும் சேர்ந்து கிட்ட தட்ட 90 ஓவர்கள் போட்டனர்.
பட்டோடி 32 ரன்கள்
( 5 x 4 )
உம்ரீக்கர் 36 ரன்கள்
( 4 x 4 )
சந்து போர்டே 61 ரன்கள்
( 7 x 4 )
ஆர் தேசாய் 29 ரன்கள்
( 4 x 4. & 1 x 6 )
இந்திய டீம் இரண்டாவது இன்னிங்சில்
ஆல் அவுட் 252 ரன்கள்
இங்கிலாந்து டீம் பவுலிங்
பாரி நைட் 2 - 18
டேவிட் ஆலன் 4 - 95
டோனி லாக் 4 - 111
இந்திய டீம் வலுவான நிலையில் இருந்தது.
வெற்றி பெற கடினமான இலக்கை ( 421 ரன்களை) அடைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டனர், இங்கிலாந்து டீம்.போதிய நேரம் கிடைத்தது அவர்களுக்கு.
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய பீட்டர் ரிச்சர்ட்சன், இந்த முறையும் பொறுமையாக ஆடினார்.இவரை தவிர இன்னும் மூன்று வீரர்கள் இரட்டைப் பட ரன்கள் எடுத்தனர்.
பீட்டர் ரிச்சர்ட்சன் 42 ரன்கள்
( 4 x 4 )
டெட் டெக்ஸ்டர் 62 ரன்கள்
( 11 x 4 )
பீட்டர் பார்பிட் 46 ரன்கள்
( 6 x 4 )
பாரி நைட் 39* ரன்கள்
( 4 x 4 )
மற்ற வீரர்கள் சொற்ப்ப ரன்கள் எடுத்தனர்.இந்திய டீம் வீரர்களின் பவுலிங்கை எதிர் கொள்ள முடியாமல் விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர்.
கடைசி ஆட்ட நாளில் மொத்த விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
ஆல் அவுட் 233 ரன்கள்
இந்திய வீரர்கள் பவுலிங்
ஆர் தேசாய் 2 - 32
வசந்த் ரஞ்சனே 2 - 31
பாலி உம்ரீக்கர் 2 - 46
சலீம் துரானி 3 - 66
வசந்த் ரஞ்சனே முதல் இன்னிங்சில் எடுத்தது 7 ரன்கள், அதில் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த டெஸ்ட் மேட்ச் அன்றைய கல்கத்தாவின் புகழ் பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைப் பெற்றது.
30.12.1961 - 04.01.1962
இந்திய டீம் 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாசுதேவன் , பெங்களூரு