மான்செஸ்டர் : இந்த சுற்றுப் பயணத்தின் பொழுது, இந்திய கிரிக்கெட் டீம் விளையாடிய மூன்றாவது டெஸ்ட், இங்கிலாந்து மண்ணில்.ஒரு வேக பந்து வீச்சாளர் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.ஒரு டீமின் கேப்டன் மட்டும் சதம் எடுத்தார்.இந்த டெஸ்டில் மொத்தம் ஏழு பூஜ்ஜியங்கள் ( 0 )
ஒரு துவக்க ஆட்டக்காரர் இரண்டு இன்னிங்சிலும்
பூஜ்ஜியங்கள் எடுத்தார்.இரண்டு முறையும் அதே பவுலருக்கு கேட்ச் முறையில் அவுட் ஆனார்.டாஸ் வென்ற இங்கிலாந்து டீம் முதலில் பேட்டிங் விளையாட முடிவு செய்தனர்.
துவக்கம் முதலே, அவர்களது பேட்டிங் நன்றாக இருந்தது.

இந்திய டீம் பவுலர்கள் வீசிய பந்துக்களை எளிதாக எதிர் கொண்டனர்.
இங்கிலாந்து டீமின் பேட்டிங்கை துவக்கியவர்கள், கேப்டன் லென் ஹட்டன், டேவிட் ஷெப்பர்ட். ( David Sheppard)இந்தியன் டீமின் பவுலிங்கை டாட்டு பாட்கர் ( Dattu Phadkar) ரமேஷ் திவேச்ச ( Ramesh Divecha) ஜோடி துவக்கினர்.டேவிட் ஷெப்பர்ட், முதலில் அவுட் ஆனார்.
LBW ராம்சந்த்
34 ரன்கள். ( 3 x 4 )
78 - 1
இரண்டாவதாக அவுட் ஆனவர் ஜாக் இகின் ( Jack Ikin)
திவேச்ச கேட்ச் பிடித்தார்.
பவுலர் குலாம் அஹமத்.
அவர் எடுத்தது 29 ரன்கள்( 1 x 4 )
133 - 2
முதல் நாள் ஆட்ட முடிவில் லென் ஹட்டன் (85*), பீட்டர் மே( 5*)
பேட்டிங் விளையாடிக் கொண்டு இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில், லென் ஹட்டன் தனது சதத்தை பூர்த்தி செய்தார் 104 ரன்கள் குவித்த லென் ஹட்டன் திவேச்ச போட்ட பந்தில், விக்கெட் கீப்பர் சென்னிடம் கேட்ச் கொடுத்து, அவுட் ஆனார்.
( 10 x 4 )
214 - 3
பீட்டர் மே சிறப்பாக ஆடினார்.மன்காட் பந்தில் , விக்கெட் கீப்பர் சென் கேட்ச் பிடிக்க இவர் அவுட் ஆனார் 69 ரன்களுக்கு.
( 9 x 4 )
248 - 4
இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் , எவான்ஸ் களத்தில் இருந்தார் 35*
இங்கிலாந்து டீமின் ஸ்கோர் ( 292 - 7 )மூன்றாம் நாள் ஆட்டம் எதிர் பார்க்காத திருப்பங்களை அளித்தது.எவான்சும், அலெக் பெட்ஸர் சேர்ந்து இங்கிலாந்து டீமின் ரன்களை உயர்த்தினர்.எட்டாவதாக எவான்ஸ், குலாம் அஹமத் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
71 ரன்கள் ( 9 x 4 & 1 x 6)
336 - 8
இவரை தொடர்ந்து ஒன்பதாவதாக அவுட் ஆனவர் ஜிம் லேக்கர்.
17 ரன்கள்
( 2 x 4 & 1 x 6 )
347 - 9
இங்கிலாந்து டீம்
டிக்ளர் செய்தது, தங்கள் முதல் இன்னிங்சை.
இந்திய டீம் 6
பவுலர்களை உபயோகித்தனர்.
டாட்டு பாட்கர் 0 - 30
ரமேஷ் திவேச்ச 3 - 102
ஜி ராம்சந்த் 1 - 78
வினு மங்காட் 2 - 67
குலாம் அஹமத் 3 - 43
விஜய் ஹாசரே 0 - 23
இந்திய டீமின் துவக்கமே சரியில்லை.வினு மன்காட், பங்கஜ் ராய் துவக்க ஆட்டக்காரர்கள்.வினு மன்காட் ஒரு பவுண்டரி அடித்தார். அலெக் பெட்ஸர் பந்தில் லாக்கிடம் கேட்ச் கொடுத்து, மன்காட்
பெவிலியன் திரும்பினார்.
4 - 1
இரண்டாவது விக்கெட்டும் விழுந்தது, அதே ஸ்கோரில்.
4 - 2
ட்ருமன் வீசிய பந்தை எதிர் கொள்ளாமலும், ஸ்கோர் ஏதும் செய்யாமலும் , பங்கஜ்
ராய் ஹட்டனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவர் மட்டும் இல்லாமல் எல்லா ஆட்டக் காரர்களும், ட்ருமனின் நேர்த்தியான, அதி வேகம் மிகுந்த பந்துக் களை எதிர் கொண்டு ஆட திணறினார்கள்.
ஹேமு அதிகாரி (0)
கேட்ச் கிரேவனே. பவுலர் ட்ருமன்
5 - 3
பாலி உம்ரீகர் 4 ரன்கள்
பவுலர் ட்ருமன்
17 - 4
டாட்டு பாட்கர் 0
விக்கெட் வீழ்த்தியவர் ட்ருமன்
17 - 5
விஜய் ஹாசரேயும், விஜய் மஞ்சுரேகரும் கொஞ்சம் தாக்கு பிடித்து ஆடினார்கள்.
ஸ்கோரை 17 ரன்களிலிருந்து 45 வரையில் நகர்த்தி சென்றனர். விஜய் மஞ்சுரேகர் அவுட்.
விக்கெட் எடுத்தவர் ட்ருமன்.
22 ரன்கள். ( 3 x 4 )
45 - 6
ரமேஷ் திவேச்ச அவுட்.
விக்கெட் வீழ்த்தியவர் ட்ருமன்
4 ரன்கள் ( 1 x 4 )
51 - 7
அதிக நேரம் பிட்சில் நின்று, பொறுமையாக ஆடி வந்த இந்திய டீம் கேப்டன் விஜய் ஹாசரே எடுத்தது 16 ரன்கள்.
( 2 x 4 )
இவர் விக்கெட்டை எடுத்தவர் பெட்ஸர்.
53 - 8
ஜி ராம்சந்த் விக்கெட்டை எடுத்தார் ட்ருமன்.
2 ரன்கள்
53 - 9
சென் அவுட்
4 ரன்கள்
( 1 x 4 )
இவர் விக்கெட்டை கைப்பற்றியதும் ட்ருமன்.இந்திய டீம் ஆல் அவுட் 58
ரன்கள். இந்திய வீரர்கள் போவதும், வருவதுமாக இருந்தனர்.
இங்கிலாந்து டீமில் மூன்றே பவுலர்கள் பவுல் செய்தனர்.
பெட்ஸர் 2 - 19
லேக்கர் 0 - 7
தன் அதி வேக
பவுலிங்கால்
அசத்தலாக பந்து வீசியவர் ட்ருமன்.
8.4 ஓவர்கள்
2 மெய்டன்கள்
31 ரன்கள்
8 விக்கெட்டுக்கள்
இந்திய அணி பாலோ ஆன் பெற்று, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது.
இந்த இன்னிங்சில் அதிக ரன்களை எடுத்தவர் ஹேமு அதிகாரி.
27 ரன்கள்
( 5 x 4 )
விஜய் ஹாசரே
16 ரன்கள்
சென்
13 ரன்கள்
மற்ற ஆட்டக் காரர்கள் ரன்கள் மிகவும் குறைவு.இந்திய டீம் இரண்டாம் இன்னிங்சில் ஆல் அவுட் 82 ரன்களுக்கு.
இந்த முறை ட்ருமன் பவுலிங் செய்தது
8 ஓவர்கள்
5 மெய்டன்கள்
9 ரன்கள்
1 விக்கெட்டு
அலெக் பெட்ஸர்
15 ஓவர்கள்
6 மெய்டன்கள்
27 ரன்கள்
5 விக்கெட்டுக்கள்
அறிமுக ஸ்பின் பவுலர் டோனி லாக் நன்றாக பந்து வீசினார்.
4 - 36
இங்கிலாந்து டீம் ஒரு இன்னிங்ஸ் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் மேட்ச்
மான்செஸ்டரில்
ஜூலை 17, 1952 துவங்கி ஜூலை 19 , 1952 முடிவடைந்தது, மூன்று நாட்களுக்குள்.
இந்த தொடரில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை துவக்கிய பிரெட் ட்ருமன் தான் முதல் பவுலர், டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தி ரிகார்டு ஏற்படுத்தியவர் ஆவார்.இவர் 67 டெஸ்டுகளில் 307 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார்.
வாசுதேவன் ,பெங்களூரு