
ரோகித் விலகலா?
இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் தான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா, இந்த போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா ? என்ற குழப்பத்திற்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. அவர் விலகிவிட்டார் என தகவல்கள் வெளியான போதும், முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என ராகுல் டிராவிட்டே கூறினார்.

டிராவிட் பேச்சு
இதுகுறித்து பேசியிருந்த அவர், ரோகித் சர்மா இன்னும் வெளியேறவில்லை. இன்று இரவு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் வரும் முடிவை வைத்து தான் இறுதி முடிவு எடுக்கப்படும். இரவு 8 மணிக்கு இதற்காக பத்திரிகையாளர்களையும் சந்திக்க போவதாக கூறினார்.

3 மாற்று தேர்வுகள்
இந்நிலையில் ஒரு வேளை ரோகித் விலகினால், மாற்று வீரராக 3 பேரை தேர்வு செய்து வைத்துள்ளதாக டிராவிட் கூறியுள்ளார். அதில், நமது வழக்கமான ஓப்பனர் மயங்க் அகர்வால். எனினும் அதில் பல விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. கே.எஸ்.பரத்-ம் ஓப்பனிங்கிற்கு உள்ளார். அவர் ஆந்திரா அணிக்காக நிறைய முறை ஓப்பனிங் ஆடியுள்ளார். அவர் நல்ல ஃபார்மில் தற்போது இருப்பதால் அவரையும் மனதில் வைத்துள்ளோம்.

சீனியர் வீரருக்கும் இடம்
ஒருவேளை அணியின் காம்போ சரிவரவில்லை என்றால், புஜாராவையும் ஓப்பனிங் ஆட வைக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியாவுக்காக இதற்கு முன் பல முறை ஓப்பனிங் களமிறங்கியுள்ளார். எனவே இவர்கள் 3 பேர் குறித்து நிறைய விஷயங்களை சிந்தித்து வைத்துள்ளோம். முதலில் ரோகித்தின் நிலை என்னவென்று பார்போம். அதன்பிறகு ப்ளேயிங் 11-க்கு ஏற்ப ஓப்பனரை தேர்வு செய்யலாம் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











