Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கில்லின் மானத்தை நேரலையில் வாங்கிய ரவி சாஸ்திரி.. வெளிப்படையாகவே பேசிட்டாரு!

IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் 34 ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது மீண்டும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. இதில் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அகமதாபாத் மைதானத்தில் சதம் அடித்தார்.

அதன் பிறகு கில் ஒருமுறை கூட அரை சதம் கூட கடக்கவில்லை. இந்த நிலையில் தமக்கு தொடக்க வீரர் என்ற நிலை வேண்டாம் என்றும் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறேன் என்று டிராவிட்டிடம் கெஞ்சி மன்றாடி இந்த இடத்தை கில் வாங்கினார்.

India vs England test - Ravi shastri gives stern warning to shubman gill

ஆனால் அதில் தொடர்ந்து தற்போது சொதப்பி வருகிறார்.இந்த நிலையில் புஜாரா ரஞ்சி கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். இந்த நிலையில், கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கில்லுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தார்.

தற்போது களமிறங்கி இருக்கும் இந்திய அணி இளம் வீரர்களைக் கொண்டது. அனுபவம் இல்லாத அணியாக இருக்கிறது. இந்த இளைஞர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். புஜாரா வேறு தற்போது வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம்.

அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் ரன்களை அடித்து வருகிறார். அவர் வேறு தேர்வு குழுவினரின் ரேடாரில் எப்போதுமே இருக்கிறார். இதனால் கில் தன்னுடைய இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி நேரலையிலே எச்சரிக்கை விடுத்திருந்தார். ரவி சாஸ்திரியின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய அணியில் ரஜத் பட்டிதார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் முதல் இன்னிங்ஸில் ஓரளவுக்கு டீசன்ட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதேபோன்று வாய்ப்புக்காக சர்பிராஸ் காணும் அணியிலே காத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்றோர் இந்த தங்கமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டால் நிச்சயம் அவர்களுடைய இடம் கேள்விக்குறியாக்க ப்படும். ஏற்கனவே பல ரசிகர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் கில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Friday, February 2, 2024, 17:43 [IST]
Other articles published on Feb 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+