72 ஆண்டு சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்... ஒரே இன்னிங்ஸில் 3 பெரும் சரித்திரங்கள்.. முழு விவரம் இதோ!
பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 72 வருட சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இரு அணிகளும் மோதி வரும் 5வது டெஸ்ட் போட்டி பெர்மிங்கம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் எடுத்தது. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆடிய இந்தியா 245 ரன்களை அடித்து 378 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

5வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சரிவில் இருந்த இந்திய அணியை காப்பாற்றியது ரிஷப் பண்ட் தான். முதலில் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய பண்ட் 111 பந்துகளில் 146 ரன்களை விளாசினார். இதில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இவர் ஜடேஜாவுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் தான் 98 - 5 என இருந்த ஸ்கோர் 320 - 6 என்ற நிலைக்கு வந்தது.

ரிஷப்பின் ஆட்டம்
2வது இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட், ருத்ர தாண்டவம் அடங்கவில்லை. 86 பந்துகளை சந்தித்த பண்ட் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்களை குவித்தார். ஆனால் இந்த முறை அவரால் சதமடிக்க முடியாமல் போய்விட்டது. இதன் மூலம் தோனியின் சாதனைகளை எல்லாம் பண்ட் முறியடித்திருந்தார்.

ரிஷப் பண்ட் சாதனை
இந்நிலையில் மேலும் 2 பெரும் சாதனைகளை பண்ட் முறியடித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பண்ட் படைத்துள்ளார். அவர் ( 203 ) ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1950ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்லைட் வால்காட் 182 ரன்களை அடித்திருந்தார்.

69 வருட ரெக்கார்ட்
அஜய் மஞ்ச்ரேக்கரின் 69 வருட சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்திற்கு வெளியே ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற பெருமையை 161 ரன்களுடன் அஜய் மஞ்ச்ரேக்கர் 1953ம் ஆண்டு படைத்தார். அதனை தற்போது ரிஷப் பண்ட் முறியடித்து அசத்தியுள்ளார்.

அதிக ஸ்கோர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபரூக் இன்ஜினியர் கடந்த 1973ம் ஆண்டு 203 ரன்கள் அடித்து பெற்றிருந்தார். இன்று ரிஷப் பண்ட், அதே ரன்களை அடித்து ஃபரூக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications