Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்ன நம்பி அந்த தப்பு செய்யவே மாட்டேன்.. களத்தில் குல்தீப் யாதவை பங்கம் செய்த ரோகித்.. என்ன நடந்தது?

IND VS ENG : இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவும் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் டாம் அண்ட் ஜெர்ரி போல் விளையாடிக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வந்தது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் விரைவாக எடுக்க வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் பந்து வீசி வந்தனர்.

India vs England test - Rohit sharma and Kuldeep Yadav animated conversation for DRS Decision made fans laugh

குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ் கட்டுக்கோப்பாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் பலமுறை பந்தை ஸ்வீப் செய்கிறேன் என்று அதை தவற விட்டு காலில் பந்து பட்டது.

இதனால் இந்திய வீரர்கள் அவுட் கேட்க நடுவர்கள் அதற்கு அவுட் தரவில்லை. இதனால் டிஆர்எஸ் முடிவை எடுக்க கூறி குல்தீப் யாதவ் ரோகித் சர்மாவிடம் பலமுறை அறிவுறுத்தினார். ஆனால் ரோகித் சர்மா குல்தீப் பேச்சை கேட்கவே இல்லை. இதைப் போன்று குல்தீப் யாதவ் பில்டராக நின்ற போதும் வேறு பந்துவீச்சாளருக்காக டிஆர்எஸ்ஐ எடுங்கள் என்று ரோகித் சர்மாவிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது ரோகித் சர்மா உன்னை நம்பி அந்த தப்பை மட்டும் நான் செய்யவே மாட்டேன் என்று கூறி பங்கமாக குல்தீப் யாதவை கலாய்த்தார். மேலும் கைகளில் ஏதும் செய்கை செய்து குல்தீப் வெறுப்பேற்றினார். எனினும் சாக் கிராலி விக்கெட்டை குல்தீப் பந்துவீசி எடுத்த போது நடுவர் அதற்கு நாட் அவுட் வழங்கினார்.

எனினும் டிஆர்எஸ் எடுக்க சொல்லி வற்புறுத்தியதால்தான் ரோகித் சர்மா எடுத்து அது அவுட் ஆக மாறியது. ரோகித் சர்மா இந்த தொடர் முழுவதும் டி ஆர் எஸ் எடுக்கும் முடிவில் மிகவும் மோசமாக செயல்பட்டு இருக்கிறார். 16 முறை டிஆர்எஸ் முடிவை ரோகித் சர்மா எடுத்து அதில் 12 முறை தோல்வியிலேயே முடிவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக தான் ஒவ்வொரு முறையும் டிஆர்எஸ் எடுக்க ரோகித் சர்மா அவ்வளவு யோசனையில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 5, 2024, 14:15 [IST]
Other articles published on Feb 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+