IND vs ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே விசாகப்பட்டினம் சென்று அங்கு பயிற்சியை தொடங்கி இருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல மிகப் பெரிய தடை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி, முகமது சமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் தற்போது ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரிய இடியாக வந்து இறங்கி இருக்கிறது.
இதனால் மாற்று வீரராக சர்பிராஸ் கான், சவுரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக சராசரி வைத்திருக்கும் சர்பிராஸ்கானுக்கு பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கே எல் ராகுல் இல்லாத நிலையில் சர்பிராஸ் கானுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் 100% நம்பினர். ஆனால் தற்போது அதற்கு ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது. தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டி வாய்ப்புக்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கனவே ரஜத் பட்டிதார் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கே எல் ராகுல் இடத்தில் தான் முன்னுரிமை வழங்கி வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார் என இரண்டு சுழற் பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அவர்களையும் கொண்டு வரலாம் என்று யோசனையில் இந்திய அணி இருக்கிறது.
இதனால் சர்பிராஸ் கான் முதல் டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இந்த நிலையில் தான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே சொதப்பலான ஆட்டத்தை தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த இரண்டு பேருமே கடந்த 11 இன்னிங்ஸ்களாக சொற்ப ரன்களிலே அடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த இருவரில் ஏதேனும் ஒரு வீரரை நீக்கிவிட்டு ரஜத் பட்டிதாரையும், கேஎல் ராகுல் இடத்தில் சர்பிராஸ் கானையும் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து ஒரே மாதிரியான பிளேயிங் லெவன் வைத்து விளையாடுவதால் தான் இந்தியா தோற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காமல் அணியிலிருந்து நீக்கினால்தான் வீரர்கள் மீண்டும் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடுவார்கள் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ரஜத் பட்டிதார் மற்றும் சர்பிராஸ் கான் இருவருக்குமே பிளேயிங் லெவனில் இடம் தர வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.