Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி ஒரு ஈகோ பிடித்த வீரர்.. ஷமியிடமிருந்து காப்பி அடித்து விட்டேன்.. இங்கிலாந்து வீரர் கருத்து

மும்பை : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி தற்போது துபாயில் பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறது.

இந்திய ஆடுகளங்கள் எப்படி இருக்குமோ அதே போல் ஒரு ஆடுகளத்தை தயார் செய்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆலிவ் ராபின்சன் செய்தியாளரிடம் பேசிய போது இந்திய தொடர் குறித்து பல கருத்துக்களை பேசியிருக்கிறார்.

India vs England test series - olie Robinson says Virat kohli has big ego


இதில் ஒரு கிரிக்கெட் வீரராக எப்போதுமே சிறந்த வீரர்களுடன் நாம் எதிர்கொண்டு விளையாட வேண்டும். ஒரு பந்துவீச்சாளராக சிறந்த பேட்ஸ்மேன்களை நாம் ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். அந்த வகையில் கோலியும் ஒரு சிறந்த வீரர். அவருடைய விக்கெட்டை நான் வீழ்த்த ஆசைப்படுகிறேன். விராட் கோலி பெரிய ஈகோ பிடித்த வீரர்.


அவருடைய ஈகோவுடன் நான் மோத ஆசைப்படுகிறேன். சொந்த மண்ணில் அவர் எங்களை எதிர்கொண்டு அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என நினைப்பார். எனக்கும் அவருக்கும் நல்ல போட்டி இதற்கு முன்பு இருந்திருக்கிறது. இந்திய தொடருக்காக முகமது சமி எவ்வாறு பந்து வீசுவாரோ அதை போல் நானும் கற்று வருகிறேன். முகமது சமி நேராக சீம் பந்துவீச்சை வீசக்கூடியவர் அதையும் நான் காப்பி அடித்து வருகிறேன்.


சமி இந்தியாவில் சிறந்த வீரராக இருக்கிறார். இதை போல் இஷாந்த் சர்மாவும் கவுண்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது அவரிடம் இருந்து சில விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இசாந்த் சர்மா இந்திய ஆடு களங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சு வீரர்களில் லீடர் நான்தான் என்பதைப் போல் நான் தயாராகி வருகிறேன்.


கிரிக்கெட் பொறுத்தவரை நான் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். இந்திய தொடரை மற்றொரு தொடராக தான் நான் பார்க்கிறேன். இங்கிலாந்துக்காக நான் சிறப்பாக செயல்பட வேண்டும். அது மட்டும் தான் என்னுடைய எண்ணத்தில் இருக்கிறதே தவிர வேறு எதையும் நான் யோசிக்கவில்லை. அதற்காக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு படையின் லீடர் என்று என்னை நான் யோசிக்கவில்லை. ஆண்டர்சன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக நான் பந்து வீசினாலே போதும் என்று ஆலிவ் ராபின்சன் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 19, 2024, 21:43 [IST]
Other articles published on Jan 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+